Dr.A.P.J.அப்துல்கலாம்,அறக்கட்டளை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவச இளநீர் வழங்குதல் நிகழ்ச்சி 19-05-2026திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு சேவை நோக்கதுடன் வழங்கப்பட்டது..!

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news  just click now

Dr.A.P.J.அப்துல்கலாம்,அறக்கட்டளை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவச இளநீர் வழங்குதல் நிகழ்ச்சி 19-05-2026
திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு சேவை நோக்கதுடன் வழங்கப்பட்டது..!

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news  just click now

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இளநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


குத்தாலம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அக்னிச்சிறகுகள் இயக்கம் சார்பில், கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் கர்ப்பிணி பெண்களுக்கு இளநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் சேவை உள்ளம் கொண்ட மனிதநேயர்  *மருந்தாளுநர் எஸ். சக்திவேல் தன்னார்வ* முறையில் 65 கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக இளநீர் வழங்கினார்.


இந்த முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு இளநீர், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்களின் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், கர்ப்பகாலத்தில் சத்தான உணவு உட்கொள்வதன் முக்கியத்துவம், இரத்த சோகையைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் தாய்-சேய் நல பாதுகாப்பு குறித்த *விழிப்புணர்வை மருத்துவர்கள் அபினேஷ்வரன், ஸ்ரீதர் மற்றும் செவிலியர்கள் வழங்கினர்.*


இயற்கை உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும் என்றும், கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் இயற்கை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் hஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news  just click now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top