World Preeclampsia Day-22-MAY-2026 உலக ப்ரீக்ளாம்ப்சியா தினம் முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கு யோகா விழிப்புணர்வு முகாம்…..

World Preeclampsia Day உலக ப்ரீக்ளாம்ப்சியா தினம் முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கு யோகா விழிப்புணர்வு முகாம்…..

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now
நாகூர், மே 05,2026
நாப்பட்டினம் மாவட்டம்,நாகூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிபெண்களுக்கான உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி கர்ப்பகால உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மே 22ஆம் தேதி உலக ப்ரீக்ளாம்ப்சியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் செயல்படும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல்வாழ்வு மையம் சார்பாக நாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.


நாகப்பட்டினம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திருமதி ரெ. கனிமொழி (BSMS, MD) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் பயம், பதட்டம், உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.


மேலும், தாய் மற்றும் சிசு நலனை பாதுகாக்கும் வகையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல்வாழ்வு முறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. குறிப்பாக பிராமரி பிராணாயாமம் (Bhramari Pranayama), ஹ்ரிதய முத்திரை (Hridaya Mudra) உள்ளிட்ட யோகப் பயிற்சிகள் மற்றும் சீரான உணவுமுறை பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


யோகப் பயிற்சிகள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை குறைத்து, தன்னிச்சையான நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகின்றன என தெரிவிக்கப்பட்டது. மெதுவான, ஆழமான மூச்சுப் பயிற்சிகள் உடல் செயல்பாடுகளை ஒத்திசைத்து, இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் விளக்கப்பட்டது.


தினமும் சில நிமிடங்கள் செய்யப்படும் பிராமரி பிராணாயாமம் கர்ப்பகால சிக்கல்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம், உயர் இரத்த அழுத்தம், எக்லாம்ப்சியா, பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே இத்தகைய யோகப் பயிற்சிகளை மேற்கொள்வது, கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கவும், தாய் மற்றும் குழந்தையின் உயிர் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும் என யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வு ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் க. முத்து கிருஷ்ணன் (BNYS, MD) அவர்கள் தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு முகாம் கர்ப்பிணி பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top