இந்தியாவின் “ஆ” ச்சரியம் ஊட்டும் அதிசய கிராமங்கள்….!! கேரள இரட்டையர் கிராமம் – கோடிஞ்சி – சமூக, விழிப்புணர்வு தொடர் -2 பத்திரிக்கையாளர், கரூர் P.ராஜலெஷ்மி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இந்தியாவின் “ஆ” ச்சரியம் ஊட்டும் அதிசய கிராமங்கள்….!! கேரள இரட்டையர் கிராமம் கோடிஞ்சி சமூக, விழிப்புணர்வு தொடர் -2 பத்திரிக்கையாளர், கரூர் P.ராஜலெஷ்மி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

விசித்திரம் என்பது இயற்கைக்கு மாறான, நாம் இதுவரை கண்டிராத, நடைமுறையில் சாத்தியக் கூறுகள் இல்லாத, இயற்கையாலும், அறிவியலாலும் நிகழக்கூடிய அசாத்திய நிகழ்வுகளை நாம் விசித்திரம் என்கிறோம்…!!

ஒரு கிராமமே ஏதாவது ஒரு விசித்திரம் கொண்டு இயற்கையாக அமைவது தான் இன்னும் ஆச்சரியப்பட வைக்கிறது.

நம்மைச் சுற்றிலும் விசித்திரம் நிறைந்துள்ளது என்பதை நாம் அறிவோம்.

உலகின் பல விசித்திர நிகழ்வுகள், இயற்கையாகவும், மனிதனாலும் தினம்தோறும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு தனிப்பட்ட நபரோ, மிருகங்களோ அல்லது கூட்டமோ விசித்திரமான காரியங்களை செய்யலாம்.

ஆனால் உலகின் பல கிராமங்களில் இருக்கும் மக்கள் விசித்திரமான சில காரியங்களைச் செய்கின்றனர். அதன்படி இந்தியாவில் இருக்கும் சில விசித்திர கிராமங்களைப் பற்றித்தான் நாம் இந்தக் கட்டுரையில் காணவுள்ளோம்.
அதுபோல் இந்தியாவின் சில முக்கியமான விசித்திர கிராமங்கள்.


இரட்டையர்கள் கிராமம்:
பொதுவாக கேரளம் பல சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. கடவுளின் சொந்த நாடு” (God’s Own Country) என்று அழைக்கப்படும், இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பசுமையான மாநிலமாகும்.

அமைதியான உப்பங்கழிகள் (Backwaters) மற்றும் படகு வீடுகள், மூணாறு போன்ற மலைப்பிரதேசங்கள், ஆயுர்வேத சிகிச்சை மையங்கள், கதகளி மற்றும் களரிப்பயட்டு போன்ற கலைகள், மற்றும் தென்னை, வாசனை திரவியங்கள் கலந்த தனித்துவமான உணவு முறை போன்று மேலும் பல சிறப்புகளை பெற்றுள்ளது.

இந்த உலகில் இரட்டையர்களுக்கு பெயர் பெற்ற நாடுகளாக விளங்கும் வியட்நாமில் ஹங் லோக் கம்யூன், நைஜீரியாவில் இக்போ-ஓரா மற்றும் பிரேசிலில் கேண்டிடோ கோடோய் ஆகியவை உள்ளன

“உலகின் இரட்டையர் தலைநகரம்” என்று அழைக்கப்படும் இக்போ-ஓராவின் சில குடும்பங்களில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டையர் ஜோடிகள் உள்ளனர்.

கேண்டிடோ கோடோயில், இரட்டையர்களைப் பார்ப்பது இயல்பானது என்று பிபிசி அறிக்கை ஒன்று கூறுகிறது .

இந்த ஊரில் ஒரு வீட்டில் இரட்டையர் இல்லையென்றால் தான் ஆச்சரியமானது என்று அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இரட்டையர் ஜோடி கூறுகின்றனர்.

பொதுவாக இந்தியாவில் 1000 பிறப்புகளில் 9 பிறப்பு இரட்டையர்களாக பிறக்கின்றனர்.

கேரளாவை பொறுத்தவரை இது 1000 பிறப்புகளில் 45 பிறப்பு இரட்டையர்களாக உள்ளது.

கோடிங்கியின் இரட்டையர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிக்கும் ‘டாக்கா’ (TAKA) எனப்படும் இரட்டையர்கள் மற்றும் உறவினர்கள் சங்கமும் செயல்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் அங்குள்ள உணவுமுறை மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இத்தனை சிறப்புகளை கொண்ட இந்த விசித்திர கிராமம் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோடிஞ்சி (Kodinhi), ‘இந்தியாவின் இரட்டையர்கள் கிராமம்’ என்று அழைக்கப்படுகிறது.

தொடரும்.,….

பத்திரிக்கையாளர், கரூர் P.ராஜலெஷ்மி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top