உலக பூமி தினம்: “ஒரு பில் – ஒரு உயிர்” திட்டம் மூலம் மரக்கன்றுகள் வழங்கல்
திருவாரூர்,
மே 2:2026
22-04-2026அன்று உலக பூமி தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. பல்வேறு நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் சிறப்பாக தன்னார்வமுறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில்
உலக பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், திருவாரூர் சீமாட்டி ஜவுளி நிறுவனம் “ஒரு பில் – ஒரு உயிர்” என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
புவி வெப்பமடைதலைத் தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், 29-04-2026:அன்று துணி வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கும் இலவசமாக செடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி திருவாரூர் சீமாட்டி ஜவுளி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த முயற்சியை வரவேற்று பாராட்டினர்.
க. பாலகுரு,
மாவட்ட செய்தியாளர்,
திருவாரூர் மாவட்டம்.
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
புதியநாளிதழ்
Akkappore.news / just click now