கன்னியாகுமரியில் முதல்வர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு….!! akkappore.news சொடுக்குங்க

கன்னியாகுமரியில் முதல்வர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு….!! akkappore.news சொடுக்குங்க

2 நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் மதியம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் 25-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு வளைவை இன்று திறந்து வைக்கிறார்.

அதன் பின் கன்னியாகுமரியில் உள்ள பொதுப்பணித் துறை விருந்தினர் இல்லத்திற்கு சென்று தங்குகிறார்.

பின்னர், மாலை அங்கிருந்து புறப்பட்டு சென்று கல்லடிவிளையில் கருணாநிதி சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

இரவு 7 மணிக்கு நாகர்கோவில் வெப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலையை திறந்துவைக்கிறார்.

பின்னர் நாளை காலை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

முதல்வர் வருகையை ஒட்டி
நெல்லை சரக டிஐஜி தலைமையில் 2500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top