
🙏🏻அகத்தின் அழகே அழகு!
🙏🏻அனுபவத்தில் கண்ட பிறகு!
🙏🏻24-02-26, செவ்வாய்க் கிழமை!
1.உலக அழகி கிளியோபாட்ரா!
உண்மை வரலாறு அறிந்தவரே!
உடலை அடக்கம் செய்தகல்லறை!
உடன்எழுதிய வாசகம் சொல்லுதே!
2.அந்த அழகும் தேவையா?
அதனால் அழிந்ததும் தேவையா?
அறிவும் திறமையும் அன்பும்அழகு!
அழியாதே என்றும் போற்றும்அழகு!
3.அழகு இல்லாத குள்ளன்என்று!
அப்பதுல்கலாம் ஐயா சொன்னது!
அவரது அறிவுத்திறமை வென்றது!
அகிலஉலகம் போற்றிய தெய்வமே!
4.கக்கன்ஜி -காமராஜர் அழகா?
காந்திஜி -கிருபளானியும் அழகா?
காலத்தை வென்ற தலைவர்களே!
கைதூக்கி தொழவும் வேண்டுமே!
5.அகத்தின் அழகே சிறந்ததே!
அதற்கு அழிவுமே கிடையாதே!
அழகான பலருடைய வாழ்வுமே!
அழிந்த வரலாற்றை அறிவோமே!
6.அழகால் மோசம் போனோரே!
அன்பை அறியாது அழிகிறாரே!
அதிகமாக ஆசைபட்டு அழிபவரே!
அறிந்தும் அறியாது அழிகின்றாரே!
7.உண்மை அன்பே போதுமே!
உலகத்தில் நிம்மதி அதுதானே!
உலகத்தில் பணத்தால் முடியாதே!
உலகத்தில் சொத்தாலும் முடியாதே!
8.காந்திக்கு மனைவி உலகஅழகி!
கணவனுக்கு மனைவியே அழகி!
காண்பது எத்தனை உறவினிலே!
காலமும் சந்தோசம் வீட்டினிலே!
9.வீட்டுக்கு மனைவி வேணுமா?
வீதிக்கு அழகியும் வேணுமா?
வாழ மனைவியே போதுமே!
வாழ வைக்கும் தெய்வமே!
10.உண்மை அன்பே உயிரே!
உணர்ந்தால் வாழ்வு உயர்வே!
உள்ளம் கொண்ட அழகிதானே!
உலகிலே உயர்ந்த அழகிஎன்றுமே!