தாதம்பட்டியில் பாலம்மாள் எல்லம்மாள் சிங்காரம்மாள் கோயில் களரி திருவிழா…!! N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் akkappore.news Just CliCK now

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகர் அருள்மிகு பாலம்மாள், எல்லம் மாள், சிங்காரம்மாள் கோவில் களரி திருவிழா 2 நாட்கள் நடந்தது.முதல் நாள் காலை 10:30 மணிக் கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் தொடங்கியது.

மாலை 6 மணிக்கு குலதெய்வங்களின் பெட்டிகளுக்கு பூஜை செய்யப் பட்டது. இரவு 7:35 மணிக்கு குலதெய்வங்களின் பெட்டிகளை சாமியாடிகளுடன் ஊர்வலமாக அழைத்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இரவு 9 மணிக்கு கரகம் ஜோடிக்கப்பட்டது

முளைப்பாரி யுடன் அழைத்து வரப்பட்டது.10:30 மணிக்கு குலதெய்வங்களுக்கு மாவிளக்கு எடுக்கப்பட்டது. 11:30 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு குல தெய்வங்க ளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.மதியம் 12 மணிக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது மாலை 5.30 மணிக்கு திருவி ளக்கு பூஜையு ம்,6மணிக்கு பௌர் ணமி பூஜையும் 6 30 மணிக்கு முளைப் பாரி வைத்து கும்மி அடித்தல் நிகழ்ச்சி யும் 7 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடந்தது.மூன்றாம் நாள் காலை 7:30 மணிக்கு முளைப்பாரி கரைக்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.இதன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர், களரி திருவிழா குழுவி னர், ஆலோசனை குழுவினர், பூசாரி கள் மற்றும் சாமியாடிகள் செய்திருந் தனர்.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்

akkappore.news
Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed