
சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்சை அடித்து கொன்ற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாரையும் தூக்கில் போடுங்கள்…!! தமிழக மக்கள் கொந்தளிப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை
வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பில் நீதிபதி முத்துக்குமரன்
தெரிவித்தார்…!!
தந்தை , மகன் மரணம் இயற்கைக்கு மாறானது எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை
வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வாசித்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பில் தெரிவித்தார்.
தந்தை மகன் இருவருக்கும் மரணத்தை விளைவிக்கும் காயங்கள் இருந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை. ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது என்றும் உறுதியாகியுள்ளது.

கைதியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நரைத்த மீசை , தாடியுடன்.


சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தீர்ப்பு குறித்து உயிரிழந்த ஜெயராஜ் மகள் கூறுகையில் நீதிமன்றத்தை நம்புகிறோம்.
இவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என நம்புகிறோம்.
இந்த தண்டனைகள் மூலம் இனிமேல் இதுபோன்று யாரும் பாதிக்கப்படக்கூடாது. இனிமேல் இதுபோன்று செய்பவர்கள் பயப்படுவார்கள். 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
என் தம்பிக்கு 31 வயது. அவரை அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அப்போதுதான் வாழ்க்கையை தொடங்கினார்.
அதிகாரத்தினால் அவனுடைய வாழ்க்கையை மொத்தமாக அழித்து விட்டார்கள்.
அதனை நினைக்கும் போது உயிரோடு இருக்கிற வரை எங்களுக்கு வேதனையாகத்தான் இருக்கும். அப்பா முன்பு தம்பியையும், தம்பி முன்பு அப்பாவையும் தாக்கியுள்ளனர்.
அடிப்பதை ரசித்திருக்கிறார்கள். ஒரு பிரஷ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம் என கூறிய இவர்களுடைய மனநிலை கொடூரமானது. எங்களுக்காக போராடி, குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி” என கண்ணீருடன் கூறினார்.
ஜெயராஜ் மனைவி செல்வராணி கூறுகையில் ‘‘அனைவரும் எங்களுடன் சேர்ந்து போராடியதால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.
இந்த சூழலில், சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்சை அடித்து கொன்ற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாரையும் தூக்கில் போடுங்கள் என தமிழக முழுவதும் பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.