தியாகிகள் தினம்


தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 23/03/2026 காலை 10.00 மணிக்கு தொண்டாமுத்தூர் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் மாவீரன் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரது 95 _ வது ஆண்டு நினைவு நாள் மலரஞ்சலி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் மாவீரன் பகத்சிங் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவிஞர் என். சிவசண்முகம், கவிஞர் சுப்பு தர்மன் ஆகியோர் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரது வீர வரலாற்றை வியந்து போற்றினர்.

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ஷைனி சிவக்குமார், கே. ரங்கநாதன், வி. ராஜாமணி, பி. ஜே. ஜானகி, மலர், எம். சோமசுந்தரம், ஆர். சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed