சாத்தான்குளம் லாக் அப் டெத் ; ரெட்டை மரண தண்டனை தீர்ப்பு…!! ரியல் சல்யூட் போலீஸ் ஏட்டு ரேவதி…!! அரசு விருது வழங்கி கவுரவிக்குமா? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சாத்தான்குளம் 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது!

இந்த வழக்கில் இப்படியான அரிய தீர்ப்பு கிடைப்பதற்கு முக்கிய சாட்சியமே ஒரு பெண் காவலர் தான்..!

மனசாட்சியுள்ள ஒரு பெண்!

அதுவும், சக காவல்துறையினரால் நடத்தப்பட்ட மனித நேயமற்ற கொடூரச் செயலைக் கண்டு மனம் பொறுக்காமல் நேரடி சாட்சியமாக மாறிய ஒரு நீதியின் தேவதை.!

அவர் தான் காவலர் ரேவதி.!

இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் முன்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதி வருகிறார்…

“சார், என்னோட மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்த அனைத்துக் கொடுமைகளையும் உங்களிடம் சொல்கிறேன்…

நான் இரண்டு பெண் குழந்தைகளின் தாய்… என் குழந்தைகளுக்கும், எனது பணிக்கும் பாதுகாப்பளிப்பதாக உத்தரவாதம் அளிக்க முடியுமா?” எனக் கேட்கிறார்!

அதற்கு உத்தரவாதம் அளித்ததும், அனைத்தையும் கொட்டித் தீர்க்கிறார்…ரேவதி எனும் தர்மத்தின் தாய்.

“சம்பவம் நடந்தன்னைக்கு எனக்கு நைட் டியூட்டி தான். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட அனைவரோடு, ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆட்களும் இருந்தாங்க. இவங்க அத்தனை பேரும் அந்த பெரியவரையும், அவரோட பையனையும் கண்மூடித்தனமாக அடிச்சாங்க…

முதல்ல அவங்கள அடிச்சது எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தான். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகணேஷ் ரெண்டு பேருமா, அப்பாவையும் பையனையும் தரையில உட்கார வச்சு, கையில கிடைச்ச லத்தியையெல்லாம் வச்சு அடிச்சுக்கிட்டே இருந்ததோட, ஷூ காலால அவங்க பிறப்புறுப்புலயும், கண்ட இடத்துலயும் மிதிச்சாங்க. இரண்டு பேரும் வேதனையால கத்துனாங்க. கத்தக் கத்த அவங்களை இவங்க எல்லாருமா அடிச்சாங்க” என்றுக் கூறியிருக்கிறார்.

இப்படி அடித்துக் கொண்டேயிருக்கும் போது இடையிடையே கேப் விட்டு அடித்திருக்கிறார்கள். அப்பாவும் பையனும் அரை மயக்க நிலையில் சோர்ந்திருந்த போது பொறுக்கமாட்டாமல் ரேவதி, “உங்களுக்கு ஏதும் வேண்டுமா அப்பா?” என்று ஜெயராஜைப் பார்த்து கேட்க, அவர் எதாவது குடிக்கக் கேட்க, காபி வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்.

அதை குடிக்கும் போதே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அந்தக் காபியையும் குடிக்கவிடாமல் தட்டிவிட்டு அவர்களை அடித்து நொறுக்கியிருக்கிறான்.

அதன் பின்னும் மனம் கேட்காமல் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்திருக்கிறார் ரேவதி.

கொடூர சைக்கோக்களுக்கு மத்தியில் மனிதநேயத்தோடு இருந்திருக்கிறார் ரேவதி!

கொடூரத்தின் அடுத்த கட்டமாக, பென்னிக்ஸை நிர்வாணமாக்கி, டேபிள் மேல் குப்புற படுக்க வைத்து, ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸாரையும் வைத்து, கையை, காலை தனித் தனியாகக் கட்டி வைத்து, மூர்க்கத்தனமாக அடித்திருக்கிறார்கள்.

இதே போல் ஜெயராஜையும் அடித்திருக்கிறார்கள். அவர்கள் அலறுவதைக் கேட்டு பொறுக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் ரேவதி.

இதில் அவர்கள் இரண்டாவதாக அடிப்பதற்கு லத்திக்கு பதிலாக இரும்புக் குழாயை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த கொடூரம் எப்படியென்பதை போஸ்ட்மார்ட்டம் செய்த இடத்திலிருந்த ஊழியர்கள் சொன்னதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்…

அப்பா, பையன் இருவருக்குமே பின்புறத்தில் தோலே இல்லாமல் சதை தான் தெரிந்தது என்றார்கள்…

தோலை முழுக்க அடித்தே உரித்திருக்கிறார்கள்… எத்தனை கொடூரம் பாருங்கள்…

இருவருக்கும், உடலிலிருந்து நீரும் ரத்தமும் தன்னாலே வழிந்த படியே இருந்திருக்கிறது.. அப்படியே அடுத்தடுத்து மரணித்திருக்கிறார்கள்…

இவ்வழக்கில் நேரடி சாட்சியமாக இருந்த ரேவதியின் சாட்சியமே வழக்கில் மற்றவர்களின் பொய்களையெல்லாம் அடித்து காலி செய்தது!

குறிப்பாக, அப்போதைய தமிழக முதல்வர் , காய்ச்சலால் இருவரும் இறந்தார்கள்… உடல்நலக்குறைவால் இறந்தார்கள் என்றெல்லாம் வித விதமாகப் பேசி, இதை மறைக்கப் பார்த்தார்…

இப்படி பொய் சொன்ன ஆட்சியாளர் ஒரு பொய்யர் என்று நிரூபித்தது ரேவதியின் மனிதாபிமானமிக்க நேரடி சாட்சியம்!

இன்னமும் நம்மோடு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு ரேவதியே சாட்சி!

ரேவதியே ஆறுதல்!

நேரடி சாட்சியம் அளித்த ரேவதிக்கு பாராட்டுகள்!

இவரது மனிதாபிமான செயலைப் பாராட்டி விருது வழங்கி கெளரவப்படுத்திட வேண்டும்!.

இனியொரு நிகழ்வு இதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும். இதுவே சரியான பாடம்.

சரியான நீதியின் தீர்ப்பு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top