

சோழவந்தான் விசாக நட்சத்திர கோயிலில் மார்ச்.6-ல் சனிப்பெயர்ச்சி..!! N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
மதுரை:
மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், இம் மாதம் 6-ம் தேதி மாலை 5…மணிக்கு சனிப்பெயர்ச்சி மகா யாகம் , அபிஷேகம், பரிகார அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
சனிபகவான் பெயர்ச்சியை முன்னிட்டு, இக் கோயிலில் வன்னி மரத்தடியில் அருள்பாலிக்கும் சனீஸ்வரலிங்கம், சனிபகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது.
இக் கோயிலின் ஸ்தல மூர்த்தி சனீஸ்வரன் லிங்கம் ஆகும்.
பிரளயநாத சுவாமி ராகு கிரகத்துக்கு அதிபதியாகும். ஸ்தல
நட்சத்திரம் விசாகம், குருவுக்கு அதிபதி யாகும்.
இக்கோயில் ஆனது, சனீஸ்வரன், ராகு, குரு ஆகிய கிரகங்களுக்குரிய சிறப்பு ஆலயம் ஆகும்.
சனிப்பெயர்ச்சிக்கான, ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம். மணி முத்தையா, கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, கவுன்சிலர் டாக்டர் எம். மருதுபாண்டியன், கவுன்சிலர் வள்ளி மயில் மணி, கோயில் கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.