ஜெயலலிதா உயிர்த்தோழி – சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி…!! தவெக விஜய்க்கு அழைப்பு விடுக்கும் ‘முதிர்ந்த’ தலைகள்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஜெயலலிதா உயிர்த்தோழி சின்னம்மா சசிகலாவுடன் ராமதாஸ் பாமக கூட்டணி…!! தவெக விஜய்க்கு அழைப்பு விடுக்கும் அரசியலில் ‘முதிர்ந்த’ தலைகள்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news
சொடுக்குங்க

ராமதாஸ் – சசிகலா திடீர் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த மார்ச் 10 ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசினார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், ராமதாஸ் – சசிகலா சந்திப்பு மற்றும் கூட்டணி குறித்த செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பான அரசியல் களம்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா, கடந்த மார்ச் 10ம் தேதி தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்துப் பேசினார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக கருதப்பட்டது.

​புதிய கட்சி:

சசிகலா அண்மையில் “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கி, அதன் சின்னமான “தென்னந்தோப்பு” சின்னத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

திடீர் கூட்டணி – சசிகலா தலைமையிலான “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” மற்றும் ராம்தாஸ் தலைமையிலான “பாட்டாளி மக்கள் கட்சி” வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இனணந்து கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக விஜய்க்கும் இந்த முதிர்ந்த அரசியல் முதிர்ந்த தலைகள் அழைப்பு விடுத்து இருப்பது தான் ஹைலைட்…!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top