239-வது முறையாக தேர்தலில் போட்டியிடும் – பிரபல தலைவர்களுக்கே டப் தரும் தேர்தல் மன்னன் மேட்டூர் பத்மராஜன்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஒருமுறை தோற்றாலே துவண்டு போகும் நமக்கு மத்தியில், 238 முறை தொடர்ச்சியாக தோற்றும், 239-வது முறையாக சளைக்காமல் தேர்தலில் நிற்கிறார் ஒரு தமிழர்!

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த 65 வயதான பத்மராஜன் தான் அந்த அசாத்திய சாதனையாளர்.

இந்தியா முழுவதும் இவர் “தேர்தல் மன்னன்” என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறார்.

சாதாரண டயர் பஞ்சர் கடை வைத்து நடத்தும் இவர், இதுவரை ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை அனைத்திலும் போட்டியிட்டுள்ளார்.

நரேந்திர மோடி, மன்மோகன் சிங், வாஜ்பாய், ராகுல் காந்தி என இந்தியாவின் அத்தனை பெரிய தலைவர்களையும் எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் டெபாசிட் பணத்தை இழந்தே, இதுவரை சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார் என்றால் இவரது நெஞ்சுரத்தைப் பார்த்துக்கொள்ளுங்களேன்! அதிகபட்சமாக 2011-ல் நடந்த தேர்தலில் 6,273 வாக்குகளைப் பெற்றதே இவரது மிகப்பெரிய ‘சாதனை’.

“எல்லோரும் ஜெயிக்கணும்னு தான் தேர்தல்ல போட்டியிடுவாங்க, ஆனா நான் அப்படி இல்லை” என சிரித்துக்கொண்டே சொல்கிறார் பத்மராஜன்.

வெற்றியோ தோல்வியோ, களத்தில் நின்று தைரியமாகப் போராடுவது தான் உண்மையான வெற்றி என நிரூபித்து, அதிக முறை தேர்தலில் தோற்றவர் என ‘லிம்கா’ சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். ஜனநாயகத்தின் மீது ஒரு சாமானிய மனிதன் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இது!

தோல்வியைக் கண்டு பயந்து ஒதுங்காமல், “பங்கேற்பதே எனது வெற்றி” என நினைக்கும் பத்மராஜனின் இந்த அசாத்தியமான மனதைரியத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு இவரது கதை ஒரு பாடமாக நமக்கு அமையுமா அல்லது காமெடி பேர்வழியா இவர்?

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் சொன்னால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed