செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு
,Akkapore.news
Akkappore.com / just click now

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி 17-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை பிப்ரவரி 20,2026 அன்று தொடங்கிவைக்கிறார்

செய்தித்தொகுப்பு

பிப், 19, 2026
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி இன்று (19.02.2026) தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வை தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, பிப்ரவரி 20-ம் தேதியன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து சென்னையில்
(18 பிப்ரவரி 2026) அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மை பாரத் அமைப்பின் மாநில இயக்குநர் திரு செந்தில்குமார் அவர்கள் பேசும்பொழுது, இந்த 17-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்றத் நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 50 பேர், ஜார்க்கண்டைச் சேர்ந்த 20 பேர், ஒடிசாவைச் சேர்ந்த 70 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 60 பேர் என மொத்தம் 200 பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.


மேலும் தொழில் வழிகாட்டல், வாழ்க்கைத் திறன் கல்வி, நேர்மறை சிந்தனை, ஆளுமை மேம்பாடு, மற்றும் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு குறித்த அமர்வுகள் இதில் இடம் பெறுகின்றன என்றார். இளையோர் நாடாளுமன்ற அமர்வுகள் மூலம் ஜனநாயக நடைமுறைகள், பொதுக் கொள்கைகள், நாடாளுமன்ற செயல்முறைகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்படும் என்றார். ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட பழங்குடியினர் நலன் சார்ந்த மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அமர்வுகள் நடைபெறவுள்ளன என்றும் இதன் மூலம் தொழில் முனைவோர் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் பயிற்சிகள் மூலம் பேரிடர் தயார் நிலை, அவசரகால செயல்பாடுகள் குறித்தும் இளைஞர்களுக்கும் எடுத்துரைக்கப்படும் என்றார்.


நாள்தோறும் மாலை வேளையில் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பழங்குடியினர் நடனங்கள், தமிழர் பாரம்பரியக் கலைகள், தமிழ்நாடு பழங்குடியினர் நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், செயிண்ட் கோபைன் தொழிற்சாலை, பட்டு நெசவுத் தளங்கள் மற்றும் காஞ்சிபுரம் அருகே முக்கியப் பண்பாட்டு, பாரம்பரிய மையங்களுக்கும் இளைஞர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. ஆர் வெங்கடேசன் மற்றும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநர் திருமதி ஜெ விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு
,Akkapore.news
Akkappore.com / just click now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)