திருவாரூர் வட்டம், இலவங்கார்குடி கிராமம், பவித்திரமாணிக்கம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள மங்கள்வரதர் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவந்த 4-ஆவது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி….
செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், புதியநாளிதழ் அக்கப்போர் – தமிழ் நாளிதழ், செய்திப்பிரிவு,
Akkappore.news
Akkappore.com
சொடுக்குங்க
பிப்,17,2026
திருவாரூர் வட்டம், இலவங்கார்குடி கிராமம், பவித்திரமாணிக்கம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள மங்கள்வரதர் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவந்த 4-ஆவது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வை.செல்வராஜ் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் வட்டம், இலவங்கார்குடி கிராமம், பவித்திரமாணிக்கம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள மங்கள்வரதர் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவந்த 4-ஆவது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வை.செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஃ ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வி.பல்லவி வர்மா, இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது…
கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்களை அதிகமளவில் வாசகர்களாக உருவாக்குவதே இப்புத்தக திருவிழாவின் மிக முக்கிய நோக்கமாகும். இப்புத்தகத் திருவிழாவானது 08.02.2026 முதல் இன்று (17.02.2026) வரை கோலகலமாக நடைபெற்று முடிவுற்றுள்ளது.
தினந்தோறும் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளும், உற்சாகத்துடன் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு எனது பாராட்டுக்கள். தலைசிறந்த அறிஞர்களின் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் தலைசிறந்த புத்தக நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன. இப்புத்தக திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என மொத்தம் 38 ஆயிரத்து 162 நபர்கள் கலந்து கொண்டனர். புத்தக திருவிழாவில் ரூ.23 லட்சத்து 22 ஆயிரத்து 599 மதிப்பீட்டில் புத்தகங்கள்; விற்பனையாகியுள்ளன. மேலும், இப்புத்தக திருவிழா நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்துதுறை அலுவலர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.கலைவாணி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர்; திருமதி.சத்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.சித்ரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சதீஷ்குமார், திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி.அகிலா சந்திரசேகர், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) திருமதி.ஜெயசித்ரா, திருவாரூர் வட்டாட்சியர் திரு.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், புத்தக வாசகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், புதியநாளிதழ் அக்கப்போர் – தமிழ் நாளிதழ், செய்திப்பிரிவு,
Akkappore.news
Akkappore.com
சொடுக்குங்க
