

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்
சர்வதேச செவிலியர் தின விழா…!! ஜெ.ஹெப்சிபாய், துணை செய்தி ஆசிரியர், செய்திப்பிரிவு, அக்கப்போர் – தமிழ் நாளிதழ். Akkappore.news சொடுக்குங்கள்

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 12/05/2026 காலை 10 மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர் பெருமக்களுக்கும், மருத்துவர்களுக்கும் உலக செவிலியர் தின விழாவை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
விழாவிற்கு மன்றத் தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் தலைமையேற்று செவிலியர் தலைமை கண்காணிப்பாளர் ஏ. சரஸ்வதி , தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் வாணி ரங்கராஜன், மருத்துவர் ஐ. ஆனந்த், செவிலியர்கள் என். புவனேஸ்வரி, ஆர். சங்கீதா, ஆர். சைலஜா, எஸ். நந்தினி, வி.எஸ். கோமதி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து சர்வதேச செவிலியர் தின விழா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர் சி. வெள்ளைச்சாமி அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. பானுமதி வெள்ளைச்சாமி, அம்பிகா, சமூக ஆர்வலர்கள் சி.வருண், கே. உதயகுமார், கே.சர்மா, தொண்டாமுத்தூர் தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் கவிஞர் சுப்புதர்மன், பொருளாளர் என். சிவசண்முகம், கவிஞர் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து செவிலியர் பெருமக்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
விழா நிறைவாக செவிலியர் தலைமை கண்காணிப்பாளர் ஏ. சரஸ்வதி நன்றி கூறினார்.
💐ஜெ.ஹெப்சிபாய், துணை செய்தி ஆசிரியர், செய்திப்பிரிவு, அக்கப்போர் – தமிழ் நாளிதழ்.
🌹
Akkappore.news
/ Click now / சொடுக்குங்கள்