தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் அய்யா நல்லகண்ணு மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி…! வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் அய்யா நல்லகண்ணு மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி…! வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி…!!

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 26/02/2026 காலை 10 மணிக்கு ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தகைசால் தமிழர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் தலைமையேற்று தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ் செம்மல் விருதாளர் கவிஞர் சுப்பு தர்மன் அவர்கள், அஞ்சல் துறை பணி நிறைவு டி. எஸ். வெங்கடாசலம் ஆகியோர் நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வியந்து போற்றினார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ஷைனி சிவக்குமார், சி. நிவேதா, மின்சாரத்துறை பணி நிறைவு கவிஞர் என். சண்முகம், பி. ஜெயராம், உலியம்பாளையம் கே. ஆறுச்சாமி, திருப்பூர் எஸ். புஷ்பராஜ், பி. நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top