
மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் மத்திய துணை ராணுவ வீரர்கள் கொடிய அணிவகுப்பு நடைபெற்றது.
தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய கொடிய அறிவிப்பு பேரணி நடைபெற்றது.

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ட்ஸ் பகுதியில் துவங்கியது.
மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் நடைபெற்ற கொடிய அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம் திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது.
16 கால் மண்டபம் கீழரத வீதி பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட் திருப்பரங்குன்றம்
அரசு மருத்துவமனை மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் கலவரத்தை அடக்கும் சிறப்பு அதிரடி படை வீரர்கள் குழுவினருடன் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது .
மதுரை மாவட்டத்தில், தேர்தல் பணிக்காக மத்திய ரிசர்வ் படை வருகை புரிந்துள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் எதிர் வரும் நாட்களில் மதுரை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ளவுள்ளது. மத்திய ரிசர்வ் படையினரை, மதுரை சரக காவல் துணைத் தலைவர் அபினவ் குமார்
மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.க.அர்விந்த் மற்றும் காவல் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்பு , மதுரை மாவட்டம் குறித்தும், மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்தும், மாவட்டத்தில் மக்களிடம் காவல்துறையினர் நடந்து கொள்ளும் முறை குறித்தும் மதுரை சரக காவல் துணை தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மத்திய ரிசர்வ் படையினரிடம் கலந்துரையாடினர்.