மீனவ சொந்தங்களே ..

தாயார் லூர்தம்மாள் சைமன் அவர்களின் மறு பிறப்பான என் தங்கை மரிய ஜெனிபருக்கு வாக்களியுங்கள்…!! கன்னியாகுமரி எம்.எல்.ஏ ஆக்குங்கள்…!! தமிழ்நாடு முக்குவர் வளர்ச்சி பாதுகாப்பு பேரவை மணக்குடி பீட்டர் ஜான் வேண்டுகோள்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news
சொடுக்குங்க

தாயார் லூர்தம்மாள் சைமன் அவர்களின் மறு பிறப்பான என் தங்கை மரிய ஜெனிபருக்கு வாக்களியுங்கள்…!! கன்னியாகுமரி எம்.எல்.ஏ ஆக்குங்கள்..!! என தமிழ்நாடு முக்குவர் வளர்ச்சி பாதுகாப்பு பேரவை – மணக்குடி பீட்டர் ஜான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வேண்டுகோளில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

நீண்ட காலத்திற்கு பிறகு தாயார் லூர்தம்மாள் சைமன் அவர்களின் மறு பிறப்பாக என் தங்கை மரிய ஜெனிபர் என் இனத்தின் அனைவருக்குமான மிகப்பெரும் போராளி
கன்னியாகுமரி சட்டமன்ற நம் மீனவர் உறவுகள் நமது வாக்குகளை நமது இனம் சார்ந்த நம்முடைய பிரதிநிதியாக சட்டசபைக்கு அனுப்ப வேண்டும்.

இதுபோன்ற தலைவர்கள் எப்போதாவது தான் பிறப்பார்கள் சிந்தித்து கை கொடுங்கள்.

மீனவர்களின் வாக்கு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நம் வீட்டு பிள்ளை ஜெனிபருக்கு வாக்களிப்போம்…!!

பதவி என்பது இல்லாத ஒருவரால் இதையெல்லாம் நம் மக்களுக்காக செய்ய விரும்புகின்ற நமது வீட்டுப் பிள்ளையை நாம் தான் வாக்களிக்கும் நம் இனத்தின் பிரதிநிதியாக சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். சிந்தியுங்கள்…!!

இவ்வாறு மணக்குடி பீட்டர் ஜான் கூறியுள்ளார்.

என் இனமான மீனவர் உறவுகளே…
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி என் அன்புக்குரிய மீனவ தலைவர்களின் தேர்தல் காலத்தில் அனைவரும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு கட்டாயம் வருகை தாருங்கள்.

நமது வீட்டுப் பிள்ளை மரிய ஜெனிபர் தேர்தலில் ஜெயிக்க வைக்க நிச்சயம் நாம் களம் காண வேண்டும். எந்த அமைப்பு வந்து பிரச்சாரத்தையோ அல்லது உதவிகளையோ செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.

அதற்கு தேவையான வசதிகளை நான் பேசி வாங்கித் தருகிறேன் அனைத்து தலைவர்களும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நம் மீனவ இனத்தின் வேட்பாளர் என் அருமை தங்கை மரிய ஜெனிபர் உடனிருந்து தோள் கொடுத்து பணி செய்ய அன்புடன் உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி ஒரு மீனவனாக அழைக்கிறேன்….!!

🙏
வீழ்ந்து கொண்டிருக்கின்ற நமது மீனவ இனம் வீறு கொண்டு எழ வேண்டும். தோள் கொடுப்போம். அனைவரும் வாருங்கள்.

இது நாம் தமிழர் கட்சியின் வெற்றி மட்டும் அல்ல. நமது மீனவ சமுதாயத்தின் வெற்றி என்பதை புரிந்து களப்பணி செய்ய தயாராவோம்…

வாருங்கள்…தோழமைகளே…

நன்றி

🙏
மணக்குடி பீட்டர்,
தமிழ்நாடு முக்குவர் வளர்ச்சி பாதுகாப்பு பேரவை.

தொகுப்பு: செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

O

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed