மதுரையில் மார்ச் 1- ஆம் தேதி பிரதமர்   பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பணிகள்  தீவிரம் – வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை..

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்,

Akkapore.news
Akkappore.com
……………………..
Just CliCK now

*உண்மை செய்திகள் உடனுக்குடன்…*
*உங்கள் உள்ளங்கையில்…*

*உலக தமிழர்கள் போர்க்குரல்….!!*

*மக்கள் சேவையில்…*

……………………………..

*நெஞ்சம் நிமிர்ந்து நேர்படப் பேசும்…..*

மதுரை:

புதுச்சேரியில் மார்ச் :1. ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு,
மாலை 3 மணிக்கு மேல் மதுரை வருகிறார், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி‌.
மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதில், தமிழ்நாடு – கேரளா இணைக்கும் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும்,
மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியான வான் கட்டுப்பாட்டு அறை கட்டிடத்தையும் திறந்து வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனைத்
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும், அதனைத்
தொடர்ந்து, மதுரை மண்டேலா நகர் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதில்,
தேசிய ஜனநாயக கூட்டணி
கட்சியினர் ,அதிமுக பொதுச்
செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக டிடிவி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், ஜி கே வாசன் ஐ .ஜே .கே. நிறுவனர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன்
உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.


மதுரை  நகர் பகுதியில் பிரதமர் பங்கேற்கும்  தேசிய ஜனநாயக பொதுக்
கூட்டத்தில் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக காவல்துறை சார்பாக வெடிகுண்டு தடுப்பு துருவினர் ஐந்து மாவட்ட குழுவினரை வரவழைக்கப்பட்டு மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களை உள்ள நிலையில்,
விழா மேடை பொதுமக்கள் அமரும் பகுதி, பொதுமக்கள் அமரும் நாற்காலிகளும் மைதானத்திற்கு கொண்டு
வரப்பட்டுள்ளது.

.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்,

Akkapore.news
Akkappore.com
……………………..
Just CliCK now

*உண்மை செய்திகள் உடனுக்குடன்…*
*உங்கள் உள்ளங்கையில்…*

*உலக தமிழர்கள் போர்க்குரல்….!!*

*மக்கள் சேவையில்…*

……………………………..

*நெஞ்சம் நிமிர்ந்து நேர்படப் பேசும்…..*

🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)