உசிலம்பட்டி: பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், வேப்பனுத்து கிராமத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

23.03.2026 அன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, தந்தை பெயரில் இருந்த நிலங்களை வாரிசுதாரர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து தருவதற்காக, முத்துராமன் என்பவரிடம் ரூ.5,000/- கையூட்டு கோரியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துராமன் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மறைமுகமாக கண்காணிப்பு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, சுப்பையா ரூ.5,000/- லஞ்சம் பெறும் வேளையில், மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுப்பையாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதுடன், இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top