என் பேச்சில் என்றும் உன் ‘அரட்டை அரங்கம்’ தொடர்கிறது…!! என் நாசி எப்போதும் உன்னையே சுவாசிக்கிறது…!! இயக்குனர், நடிகர், குருநாதர் – விசுவுக்காக சீடர் உதயம் ராம் உருக்க கவிதை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

தவமிருந்து பெற்ற வரம்

என் வீட்டில்
வீசும் காற்றில்
விசு வாசம் மணக்கிறது

என் பேச்சில்
என்றும் உன்
அரட்டை அரங்கம் தொடர்கிறதுஎன் நாசி எப்போதும்
உன்னையே சுவாசிக்கிறது

என் உயிரணு ஒவ்வொன்றும் உன்னையே
ஆராதிக்கின்றது.

எனக்காக பிறக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
உன் நினைவும்
உடன்பிறப்பது
நான் தவமிருந்து பெற்ற அதிசய ஆனந்த வரம் !

உன் வாழ்க்கை
எனது பாதையாகட்டும்!
உன் வாழ்த்து
என்னை வாழ வைக்கட்டும்!

ஆறாம் ஆண்டில்
ஆறாத வலியுடன்

  • உதயம் ராம்
  • 22.03.2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top