செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ? ஆடிப்போன எஸ்.பி வேலுமணி….!! செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ? ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்தமுறை கோவையில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்விக்கு அதிமுக எஸ்.பி வேலுமணி பதில் அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னையில் இருந்து கோவை வந்தார். வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு அவர் முதல்முறை கோவை வருவதால் அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் வேலுமணியை தடபுடலாக வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி வேலுமணி, “கோவை மாவட்டத்தில் முழுமையாக வேட்பாளர்கள் அறிவிக்கபட்டுள்ளனர்.

கோவை அதிமுக கோட்டை
நீலகிரி, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர மற்ற இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திற்கு எங்களுக்கு வேட்பாளராக மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் இது எப்போதுமே அதிமுக கோட்டை.

அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்துள்ளோம். 50 வருடங்களில் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த 4 வருடங்களில் கொடுத்திருக்கிறோம். செய்ய முடியாத திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறோம்.. அத்திக்கடவு அவனாசி திட்டம் , விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.

வெற்றி பெறுவோம்
கடந்த ஐந்து வருடங்களாக கோவையில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி வரும். எடப்பாடியார் தலைமையில் வருவது உறுதியாகிவிட்டது. அவிநாசி தொகுதியை சேர்த்து 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.


தமிழகம் முழுவதும் 210 தொகுதிகளில் பெறுவோம். திமுக ஆட்சியில் கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் வளர்ச்சி கொண்டு வரப்படும். மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை கொண்டு வருவோம். இந்த ஆட்சியில் குடிநீர் வரி , சொத்து வரி உட்பட அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

சின்ன சின்ன பிரச்சனைகள்
திமுக ஆட்சியில் குப்பைக்கு கூட வரி போடுகிறார்கள். நாங்கள் களத்தில் நேர்மையாக மக்களைச் சந்திப்போம். நாங்கள் செய்த சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்குகளை பெறுவோம். தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில் அதிமுக தான் பெரிய கட்சி. கூட்டணிக் கட்சிகளிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம், சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும் . அவை எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார். கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக வெளியான கேள்விக்கு ஒரு நிமிடம் ஜர்க் ஆகி பிறகு சிரித்து கொண்டே பதில் அளித்த வேலுமணி,” நாங்கள் எங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம் . ஆனால் இன்னும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அவர்கள் வேட்பாளர்களை அறிவித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

செந்தில் பாலாஜி கேள்வி
திமுக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னதாக உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நாங்கள் திட்டங்களை கொடுத்திருக்கிறோம். கோவையில் தற்போது எந்த திட்டங்களும் நடைபெறவில்ல. மீண்டும் வளர்ச்சி பெற அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top