ஜிப்மரில் முதலாம் ஆண்டு செவிலிய மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் விழா…செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன்,
புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன்,
புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now
மார்ச்,03, 2026
புதுச்சேரி ஜிப்மர் செவிலியர் கல்லூரி முதலாம் ஆண்டு செவிலிய மாணவர்களுக்கான விளக்கேற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவினை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் 20ஆம் ஆண்டு விழா டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஜிப்மர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தன்வந்தரி பாடலுடன் தொடங்கப்பட்டது. இதில் செவிலியக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். ம. ஜெ. குமாரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் ஜிப்மர் கல்வித் துறைத் தலைவர் மருத்துவர். விக்ரம் காட்டே அவர்கள் தலைமைத் தாங்கினார். முனைவர் சுக்ஹப்பால் கவுர், பேராசிரியர் மற்றும் முதல்வர், தேசிய செவிலியர் கல்வி நிறுவனம், முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் ஜிப்மர் ஆராய்ச்சி துறைத் தலைவர் மருத்துவர்.
D. காதம்பரி மற்றும் ஜிப்மர் துணை இயக்குநர் (நிர்வாகம்) (பொறுப்பு) மருத்துவர். K.C. பிரேமராஜன் ஆகியோர் பாராட்டுரை ஆற்றினார்கள்.
செவிலியர் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர். வெற்றிச்செல்வி. பி அவர்கள் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசிக்க, செவிலியர் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர். லட்சுமி ராமமூர்த்தி விளக்கேற்றும் விழாவின் சிறப்பம்சம் குறித்து பேசினார்.
அதன் தொடர்ச்சியாக சிறப்பு விருந்தினர் மற்றும் செவிலிய துறைத் அதிகாரிகள் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு தீபம் ஏற்றினார்கள். செவிலியப் பிரிவு பொறுப்பாளர் செல்வி. புஷ்பலதா. K அவர்கள் பிளாரென்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் உறுதிமொழியைக் கூற அதனை பின் தொடர்ந்து செவிலிய மாணவ மாணவியர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்கள். இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் பாடல் பாடினார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் செவிலியர் படிப்பில் முதலிடம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக உதவி பேராசிரியர் திரு. R. S. ரமேஷ் நன்றியுரை கூற விழா காலை 11.50 மணியளவில் தேசிய கீதத்துடன் இனிதே நிறைவு பெற்றது. செவிலியர் கல்லூரி ஆசிரியர் முனைவர். ஜனார்த்தனன். B அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now