வரலாறு முக்கியம் அமைச்சரே…!! சிம்ரன், சிரஞ்சீவிக்கு மக்கள் கூட்டம் கூடியது….!! அதுபோல விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? மாறாதா? மூத்த பத்திரிக்கையாளர் காங்கேயம் கோபாலகிருஷ்ணன். அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பிரஜா ராஜ்யம் கட்சி துவங்கிய போது…சிரஞ்சீவிக்கு கூடிய கூட்டம்

நடிகை சிம்ரன் என்ற ஒரு திரைப்பட கலைஞர் சினிமா துறையில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கினர். நான் காலைக்கதிர் நாளிதழ் செய்தியாளராக இருந்தபோது அவர் காங்கேயம் வந்தார்.

நடிகர் சிம்ரன் சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தார். அப்போது இதே போன்று சினிமா ரசிகர்கள் அளவு கடந்து திரண்டனர். மாடிகளில் ஏறி குதித்தனர்.

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான கூட்டம் வந்தது.ஆனால் ஒரு அரசியல் மாற்றத்தை அவரால் உருவாக்க முடியாது. கூத்தாடிகளை மக்கள் ஆர்வமாக பார்ப்பார்கள்.

ஆனால் வாக்காக மாறாது. பொதுவாக சினிமா, நாடகத்தை அனைத்து கட்சி சார்ந்தவர்களும் பார்ப்பார்கள். ஆனால் வாக்களிக்கும் போது அவரவர்களுக்கு பிடித்த கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள்.

பொதுவாக கூத்தாடிகள் மேல் மக்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பது வழக்கம் தான். ஆனால் அது வாக்காக மாறாது. சிரஞ்சீவி தெலுங்கு நடிகர் பிரஜா ராஜ்யம் என்ற ஒரு கட்சியை துவக்கினார்.

கடல் அலை போல் கூட்டம் திரண்டது. ஆனால் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியவில்லை கட்சியை கலைத்து விட்டார். சிவாஜியும் கட்சி துவங்கினார்.

தமிழகம் முழுவதும் சூறாவளியாக பிரச்சாரம் செய்தார். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அந்த கட்சி பாதியிலேயே முடங்கிப் போனது. நடிகர் சிவாஜியின் சொத்து கரைந்து போனது.

ஆனால் சிவாஜி மீது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் உயிரை வைத்திருந்தனர் இருந்தும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அரசியலில் வெற்றி பெற்றார் என்றால் அவர் 30 ஆண்டுகாலம் திமுக கட்சியில் இருந்து மக்களின் நலன்களை அறிந்து தனியாக கட்சி துவங்கி பின்னர் தான் வெற்றி பெற்றார்.

திடீரென்று அவர் ஒரு கட்சியை துவங்கி ஆட்சியைப் பிடிக்கவில்லை . 40 ஆண்டுகள் கடும் உழைப்புக்கு பிறகு ஆட்சியை பிடித்தார். எனவே வரலாறு முக்கியம் அமைச்சரே …!!

  • மூத்த பத்திரிக்கையாளர் காங்கேயம் கோபாலகிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed