“வாசிப்பு வாழ்வை வளமாக்கும்”. மலேசியாவில் பெண்கள் முன்னேற்றக் கழகம் முழக்கம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கு சில காரணங்கள் உள்ளன. பெற்றோா்களுக்கு வீட்டில் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே அமைந்து விடுகின்றனா்.

இணையவழித் தோற்றங்களும் வாசிப்புப் பழக்கத்தை வற்றச் செய்துவிட்டன.

மலேசியா நாட்டில் பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், கங்கா அகாடமி மலேசியாவின் இயக்குனர், தமிழர் பாரம்பரிய கழகத்தின் ஆலோசகர், சமூக சேவகி திருமதி.கங்கா வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்க பெண்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கங்கா அகாடமி என்னும் பெயரில் பெண்கள் சுயமாக பொருள் ஈட்ட தமிழர்களின் பாரம்பரிய கைத்தொழில்களை(பூமாலை தொடுதல், பலகாரம், தாய் சேய் குளியல் முறைகள், பாரம்பரிய மருத்துவ முறைகள், பெண்கள் அலங்கார பயிற்சி,செடி நடுதல்) உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து பொருளாதாரத்தில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார்.

வீட்டில் இருந்தப்படியே பெண்கள் வாசிக்க “நாள் ஒரு பக்கம் ” என்ற வகையில் குடும்ப பெண்கள் சிறுகதை முதல் சிறந்த நாவல் களையும் கொடுத்து அனைவரையும் வாசிக்க ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருகிறார் .

தாய்மொழி பற்றும் உணர்வும் உள்ளத்தில் ஏற்படுத்தப்படுகிறது.
இலக்கியம் மேம்டுத்தப்படுகிறது. மேலும் அறிவும் விருத்தியாகி பல்வேறு நாட்டு நடப்பு செய்திகளையும் வாழ்க்கை முன்னேற்ற நம்பிக்கை சிந்தனைகளையும் பெற முடிகிறது.

அக்கப்போர் நாளிதழ் akkappore.news

சொடுக்குங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed