குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சேவை அமைப்பு மூலம் சுற்றுச்சூழலை காக்க மரக்கன்றுகள் வழங்கும் விழா…!!
K.சாமி, நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், Akkappore.news / just CLICK now

குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சேவை அமைப்பின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

குமாரபாளையம்: தளிர்விடும் பாரதம் அமைப்பின் மூலம் சுற்று சூழலை பேணும் வகையில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி சின்னப்பநாயக்கன் பாளையம் அரசு பள்ளி வளாகத்தில், தளிர் விடும் பாரதம் சேவை அமைப்பின் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

14 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பின் தலைவராக சீனிவாசன், செயலாளராக பிரபு, பொருளாளராக சின்னையன் மற்றும் புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.

நடப்பு ஆண்டில் பனைவிதை நடுதல், மரக்கன்றுகள் நடுதல், நெகிழி ஒழிப்பு ஆகிய சேவைப் பணிகள் திட்டமிடப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வரதராஜன், கோவர்த்தனன், கோகுலசெல்வி, சரண்யா, தமிழ்செல்வி, தினேஷ், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed