வைரமுத்துவுக்கு ஞான பீட விருது …!! சில தனிப்பட்ட விமர்சனங்களும், உள்நோக்கம் கொண்ட கூச்சல்களும்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழ் இலக்கியம் மற்றும் திரைத்துறையில் அரை நூற்றாண்டு காலமாகத் தன் பேனா முனையால் சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து.

அவருக்கு ஒரு விருது அறிவிக்கப்படும் போதெல்லாம், இலக்கியத் தகுதியைத் தாண்டி சில தனிப்பட்ட விமர்சனங்களும், உள்நோக்கம் கொண்ட கூச்சல்களும் எழுவது வாடிக்கையாகிவிட்டது.

அண்மையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட விருதைக் குறித்து பலர் போகிற போக்கில் விமர்சனம் என்ற பெயரில் சேற்றை வாரி இறைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு விருது வழங்கப்படுவது அவருடைய படைப்பின் செழுமைக்காகவும், மொழியாளுமைக்காகவும் தான்.

கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் முதல் இன்றுவரை அவர் வடித்துள்ள வரிகள் தமிழ் மொழிக்குச் சேர்த்த பெருமை சாதாரணமானது அல்ல.

வைரமுத்துவின் தமிழை விமர்சிக்கத் தகுதி இல்லாதவர்கள், அவருடைய விருதைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

விமர்சனம் செய்பவர்கள் பெரும்பாலும் படைப்பின் தரத்தைப் பேசுவதில்லை; மாறாக, தனிமனிதத் தாக்குதல்களையே ஆயுதமாக எடுக்கிறார்கள்.

ஒரு கலைஞனின் தனிப்பட்ட வாழ்வியல் சர்ச்சைகளையும், அவர் படைத்த மகத்தான காவியங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வது அறியாமையின் உச்சம்.

வைரமுத்துவின் வரிகள் உலகெங்கும் வாழும் தமிழர்களின் ரத்தத்தில் கலந்திருப்பவை. அதை எந்த ஒரு விமர்சனத்தாலும் துடைத்து எறிந்துவிட முடியாது.

தேசிய விருதுகளை ஏழு முறை வென்று சாதனை படைத்த ஒரு கவிஞனை, சலசலப்புகளால் வீழ்த்திவிட முடியாது. அவர் வாங்கிய ஒவ்வொரு விருதும் கோடிக்கணக்கான தமிழர்களின் ரசனைக்குக் கிடைத்த அங்கீகாரம்.

காழ்ப்புணர்ச்சி கொண்டு விமர்சிப்பவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்.

வைரமுத்துவிற்கு தற்போது கிடைத்திருக்கும் ஞானபீட விருது அவருடைய உழைப்பிற்கும், தமிழ் மீது அவர் கொண்டிருக்கும் தீராக் காதலுக்கும் கிடைத்த வெற்றி.

வேறு எதையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

@top fans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed