குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட ஆரம்ப பள்ளியில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்திய பட்டாம்பூச்சி அறக்கட்டளை குழுவினர்…!! பொது மக்களிடம் குவியும் பாராட்டு…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

நீலகிரி மாவட்டம், குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரேணுகா, எங்கள் பட்டாம்பூச்சி குழுவாகிய எங்களை அணுகி பள்ளியின் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

இந்நிலையில் வகுப்பறையில் ஓவியங்கள் வரைபடங்கள் ஏதும் இன்றி பொலிவின்றி காணப்படுவதாலும் பள்ளிக்கூடத்தின் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த வண்ணங்கள் மழை வெயிலின் காரணமாக பொலிவில்லாமல் இருப்பதாலும் பள்ளிக்கு வண்ணம் வண்ணம் தீட்டி ஓவியங்கள் வரைந்து தருமாறு உதவி கேட்டார்.

அதன் அடிப்படையில் பள்ளியை பார்வையிட்டு வண்ணம் தீட்டுவதற்காக திருப்பூர் ரோட்டரி கிளப் ஆப் மெரிடியன் பொறுப்பாளர்களை அணுகி உதவி கேட்கப்பட்டது.

உடனே அவர்கள் பள்ளிக்கு ரூ.13,000 மதிப்பில் வண்ணங்கள் வாங்கி கொடுத்தனர்.

அதன் பின்னர்,, என்னுடைய தலைமையில் எங்கள் அரசு பள்ளி ஆசிரியர்களான ரவிச்சந்திரன், பிரபு,கார்த்திகேயன், காளிதாஸ், செந்தில்குமார், மூர்த்தி மற்றும் நண்பர் வருண் பாபு ஆகியோர் விடுமுறை நாளான 14.3.2025 சனி மற்றும் 15.3.2026 இரண்டு நாட்களில் பள்ளிக்கு வண்ணம் அடித்து மாணவர்களுக்கு பிடித்தமான ஓவியங்கள் மற்றும் வகுப்புக்குள் பாடம் சார்ந்த ஓவியங்கள் வரைந்து கொடுக்கப்பட்டது.

இதனால் மாணவர்களின் கல்வியில் ஊக்கம், பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என நம்பிக்கையில் எங்கள் பட்டாம்பூச்சி குழு மகிழ்ச்சி அடைகிறது.

இந்த வாய்ப்பை தந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்றும் வண்ணங்கள் வாங்க உதவி செய்த ரோட்டரி கிளப் ஆப் மெரிடியன் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பட்டாம்பூச்சி குழுவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒருங்கிணைப்பில்….
சந்தோஷ்குமார்

ஒருங்கிணைப்பாளர்

பட்டாம்பூச்சி குழு அறக்கட்டளை

78711 88752
திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed