பட்டியல் இன மக்களை போல மருத்துவர், வண்ணார் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு அரசியலில் பிரதிநித்துவம் தாருங்கள்…!! அரசியல் கட்சி தலைவர்களுக்கு நவசமாஜ் சாரிட்டபிள் சொசைட்டி தலைவர், முனைவர், பேராசிரியர் M.அன்பானந்தம் வேண்டுகோள்…!!

‘சமத்துவம்’, ‘சமுக நீதி”எல்லோருக்கும் எல்லாம்’ போன்ற தத்துவத்தின் பலனாக இட ஒதுக்கீடு பலன்களை விளிம்பு நிலை மக்களாகிய மருத்துவர் போன்றோர் பெற்று வருகிறோம். இட ஒதுக்கீடு கொள்கைகள் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார வாழ்க்கை வளர்ச்சியில் எங்களுக்கு நெம்புகோலாக பயன் படுவது போல் அரசியலில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை அகற்றவும் இட ஒதிக்கீடு கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்கள் அதிகாரம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். பட்டியல் இன மக்கள் பெறும் அரசியல் பலன்கள் போல் விளிம்பு நிலை மக்களும் பெறவேண்டும்.

பிற்பட்ட மக்களில் முன்னேறிய மற்றும் எண்ணிக்கை அதிகம் உள்ள சாதியினரே திரும்ப திரும்ப வாக்கு அரசியலில் வெற்றி பெற முடிகிறது.

அவர்களே விளிம்புநிலை மக்களை அடக்கி ஆள்கிறார்கள். இவ்வாறாக மக்களிடையே இப்பொழுது நிலவும் ஏற்ற தாழ்வுகள் ஒவ்வொரு தேர்தலிலும் நிரந்தரம் ஆக்கப்படுகிறது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு மறைவதில்லை

வெற்றி வாய்ப்புள்ள பெரிய கட்சிகள் எங்கள் விருப்ப மனுவை பெற மறுக்கிறார்கள். கட்சிகளில் ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக உழைத்தாலும் தேர்தலில் நிற்க இடம் கொடுப்பதில்லை. அவர்களுக்கு கட்சி கொள்கை, ஆட்சி, பற்றி அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.

ஜனநாயக நாட்டில், வாக்கு அடிப்படையாலான தேர்தலில் நாங்கள் கட்சிகள் துணையின்றி மக்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியாது.

மக்கள் மன்றங்களில் குரலற்றவர்களாக எங்களின் தாழ்வு நிலையை சொல்ல முடியாது அரசியல் அதிகாரமற்றவர்கள் எப்போதும் பிற்படுத்தப்பட்டவர்களே. இவர்களுக்கு பிரதிநித்துவம் இல்லை.

ஆதலால் கட்சி தலைவர்கள் கருணை கூர்ந்து மருத்துவர் வண்ணார் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு சில தொகுதிகளை ஒதுக்கித்தர வேண்டும். விருப்ப மனு பெறும் பொழுதும் நேர்காணல் பொழுதும் கருணையோடு செயல்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்…!!

  • – முனைவர், பேராசிரியர் M.அன்பானந்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed