தமிழக கவர்னருடன் அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் – பிரபல வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு akkappore.news சொடுக்குங்க

Met Tamilnadu Governor, Lokbhawan today morning


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்று காலை (27-4-2026)தமிழகக்கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (Rajendra Arlekar)அவர்களை கிண்டி லோக்பவனில் சந்தித்தேன்!

பொதுவாக நான் நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்த எனது பொதுநல வழக்குகளைப் பற்றி கேட்டார்! வடக்கின் கங்கை நதியானது தெற்கின் குமரி முனையைத் தொட வேண்டும் என்கிற மாபெரும் #நதிநீர்இணைப்பு திட்டத்தால் இந்தியா முழுக்க நலமும் வளமும் பெற வேண்டும் என்கிற நோக்கில் நான் தொடுத்த வழக்குகள் குறித்து அவரிடம் விரிவாகப் பேசினேன்.

யஒரு சேர அவர் கேரளாவிற்கும் கவர்னராக இருப்பதால் #கண்ணகிகோயில் வழக்கு குறித்தும் சொன்னேன். இதுவரை கேரளாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள நதிநீர் பிரச்சினைகளான #நெய்யாறு, #கொடுமுடிஆறு #பச்சயாறு #அடவிநயினாரஅணைக்கு வரும் நீர் வரத்தைத் தடுத்தல், #அச்சன்கோயில்பம்பையாற்றைத்சாத்தூர் #வைப்பாற்றுடன்இணைத்தல்! அது மட்டுமல்ல #செண்பகவல்லிஅணைஉடைப்பை சீர் செய்தல்! பலமுறை சொல்லியும் அதைச் சீர் செய்யாமல் இருக்கும் கேரளா அரசின் அகம்பாவத்தையும் கூடவே ஸ்ரீவில்லிபுத்தூர்
#அழகர்அணைத் திட்டம், #முல்லைப்பெரியாறு, #ஆழியாறு #பரம்பிக்குளம், #பாண்டியாறு_புன்னம்புழா,கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த #சிறுவாணி #பம்பாறு #புதுமைப்பித்தனுக்குசிறப்புஅமராவதி போன்ற நதிகளுடன் கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள பிரச்சனைகளையும் எடுத்துச் சொன்னேன்.

அதேபோல் கர்நாடகாவுடன் #காவேரி , #தென்பெண்ணை ஆறு #ஒக்கனேக்கல் சம்பந்தமானதும் தென்பெண்ணையாறுக்கு நடுவர் மன்றம் அமைப்பது குறித்தும் எடுத்துரைத்தேன். அதுபோக ஆந்திராவுடன் #பாலாறு,#பொன்னியாறு போன்றவற்றுடனான தமிழகத்தாவாக்களையும் எடுத்துச் சொன்னபோது . மிகப்பொறுமையாகவும் அக்கறையாகவும் கவர்னர் உன்னிப்பாகக்கேட்டார்.

தமிழ்நாட்டுப் பிரச்சனைகளான #நாகப்பட்டினம் மற்றும் #கடலூர்த் துறைமுகம் சீரமைப்பு, நெடுநாளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் #கச்சத்தீவு தொடர்ந்து வரும் தமிழக #மீனவர்பிரச்சனைகள் இவற்றையெல்லாம் குறித்து அவரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது!

உரையாடலுக்கு இடையே முன்னாள் ஆளுநர் ரவி போல அனைத்தையும் ஆர்வத்துடன் கேட்டார். இவர் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர் அடிப்படையில் பாஜகவின் சாதாரணத் தொண்டராக இருந்து மக்கள் செல்வாக்குடன் மாநில அமைச்சர் தொடர்ந்து கோவா சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் கவர்னர் என இன்று படிப்படியாக உயர்ந்து வந்திருக்கிறார். அந்த வகையில் பிரதமர் மோடியின் நன்மதிப்பைப் பெற்றவர்!

மிக எளிமையாக இருக்கின்றார்! நான் சொல்வதை ஆழ்ந்து உள்வாங்குகிறார். அடுத்தவரைப் பேச விட்டு மௌனமாக இருக்கிறார்.! இப்படி ஒரு மென்மையான அருமையான மனிதரைச் சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது! தமிழக பாஜக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் உங்களை நலம் விசாரித்ததாகச் சொல்ல சொன்னார் என்றவுடன்கைகளைப் பற்றிக் கொண்டார்.

செண்பகவல்லிஅணையை சீர்திருத்தம் செய்ய சொல்லி நான் கேட்டவுடன் “ அவசியம் இது குறித்து பேசுகிறேன் இரண்டு மாநிலத்திற்கும் நான் கவர்னராக இருப்பதால் இரண்டு கண்களைப் போலப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த பிரச்சனை குறித்துப் பேசி நல்லதொரு முடிவை எடுக்கச் செய்யலாம்” என்று உறுதி அளித்தார். அதை பொறுப்புடன் கையாண்டு சரி செய்ய வேண்டியது முக்கியம் என்று உணர்ந்திருக்கிறேன் எனப் புன்னகையுடன் கூறினார். இன்று காலை ஒரு அருமையான சந்திப்பாக இந்நிகழ்வு அமைந்தது!

1975 ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் #மோகனலால்சுகாதியா தமிழ்நாட்டுக்குக் கவர்னராக இருந்த காலத்தில் இருந்து கவர்னர் மாளிகையான ராஜ்பவனிற்குச் செல்லவும் கவர்னரைச் சந்திக்கவும் எனக்கு அனுமதிகள் உண்டு.
தொடர்ந்த பணிகள் குறித்த நினைவுகளுடன் நாளும் இன்ற

கேஎஸ்ஆர்போஸ்ட்

ksrpost

27-4-2026.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top