
விஜய் மனைவி சங்கீதாவும்.. ஸ்டாலின் தங்கச்சி செல்வியும் நெருங்கிய தோழிகள்.. இப்போ எல்லாம் புரியுதா? பரபரப்பை கிளப்பிய பிரபலம்….!!
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக பாஜக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், பாஜக பிரமுகரும் சென்னை முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் குறித்து கராத்தே தியாகராஜன் பேசியது சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தெருமுனை தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை முன்னெடுத்து வருகிறது தமிழக பாஜக. அந்த வகையில், நாளை நமதே; தமிழ்நாடும் நமதே எனும் தலைப்பில் பொதுக் கூட்டங்களை நடத்துகின்றனர்.
இந்த கூட்டங்களில், பல்வேறு சர்ச்சையான சம்பவங்களை தமிழக பாஜகவினர் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அடையாறு பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் தமிழக பாஜகவின் சக்தி கேந்திரா ஏற்பாட்டில் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில செயலாளரும், சென்னையின் முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய கராத்தே தியாகராஜன்,” தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ள பிரச்சனையைப் பற்றி பேசினார் கராத்தே தியாகராஜன்.
அப்போது,” பத்து நாளைக்கு முன்பு நயினார் நாகேந்திரன் ஒரு தகவலைச் சொன்னார். அதுக்கு எல்லாரும் குதிச்சாங்க. ஆனா, அந்த நபரால் (விஜய்) பாதிக்கப்பட்டவரே வெட்ட வெளிச்சமாக வெளியே வரும்போது, சோசியல் மீடியா உட்பட எல்லா இடத்துலயும் பரவியிருக்கிறது. இந்த விவகாரம் நயினாருக்கு முன்கூட்டியே தெரியுமோ என்னமோ? ஆனா, ஒன்னு மட்டும் எல்லோருக்கும் தெரியும். நடிகர் விஜய்யோட மனைவி சங்கீதாவும், முதல்வர் ஸ்டாலினின் தங்கை செல்வியும் நெருங்கிய நண்பர்கள்; குடும்ப நண்பர்கள். இதையெல்லாம்… கூட்டிக் கழிச்சிப் பார்த்தா புரிஞ்சிக்கலாம். இந்த விவகாரத்தில் எல்லாம் புரியும்.
