மதுரையில் கருப்பு பல்சர் தினேஷின் கட் -அவுட்டுக்கு ரசிகர்கள் பாலபிஷேகம்..!! மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர் N.ரவிச்சந்திரன்,,அக்கப்போர் நாளிதழ், Akkappore.newx சொடுக்குங்க

மதுரை:

அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் அட்டகத்தி தினேஷ்.
விசாரணை, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தினேஷ் மெகா ஹிட் ஆன ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். அப்படத்தை தொடர்ந்து, இவர் முரளி கிருஷ் இயக்கத்தில் ‘கருப்பு பல்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படத்தில் ரேஷ்மா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
படம் வருகிற 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் , ‘கருப்பு பல்சர்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.
ட்ரெய்லர் வெளியிட்டை கொண்டாடும் விதமாக அட்டகத்தி தினேஷ் ரசிகர்கள் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சக்தி சினிமாஸ் திரையரங்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், திரையரங்கில் வைத்திருந்த தினேஷின் கட்டவுட்க்கு பாலபிஷேகம் செய்தும் கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்து, தப்பாட்டத்திற்கு நடனமாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ட்ரைலர் வெளியீட்டை முன்னிட்டு அப்பகுதியில் இருந்த மக்களிடையே இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜல்லிக்கட்டையும் மதுரையும் மையமாக வைத்து உருவாகியுள்ள கருப்பு பல்சர் திரைப்படத்தை காண மதுரை தினேஷ் ரசிகர்கள் ஆர்வமுடன் வெளியிட்டு நாளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)