சொந்த வீடு அமையும் யோகம் யாருக்கு…??
-கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ் ஜோதிடம் அறிவோம் தொடர் – 7
akkappore.news சொடுக்குங்க

நம் வாழ்க்கையில் வீடு மனை மக்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அந்த வரத்தை நாம் தெரிந்து கொள்வதற்கு ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளின் மூலமே நாம் தெரிந்து எல்லோருக்கும் அவர்கள் நினைத்தது போல சொந்த வீடு அமைந்து விடுகிறதா அப்படி என்று பார்த்தால் கேள்விக்குறி தான்.

எல்லோருக்கும் அழகான ஒரு வீடு கட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் சிலருக்கு மட்டுமே அது நிறைவேறும் சிலருக்கு அது எளிதில் கிடைக்காது.

அன்றே முன்னோர்கள் சொல்லி இருக்காங்க கல்யாணம் பண்ணி பாரு வீட்டை கட்டிப்பாரு அப்படின்னு சொல்லி இருக்காங்க.

இந்த ரெண்டு விஷயங்களுமே பாத்தீங்கன்னா ஒரு மனிதனுடைய வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது ஒரு சிலருக்கு மட்டுமே எளிதில் வீடு அமையக்கூடிய அமைப்புகள் ஏற்படும்.

அந்த அமைப்பு நம்ம ஜாதகத்துல எப்படி இருக்குது அப்படிங்கிறத பத்தி நாம பார்க்கலாம் வீடு என்றாலே நான்காம் பாவம்தான் அதில் உள்ள சுபகிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு புதன் செவ்வாய் சுக்கிரன் வளர்பிறை சந்திரன் இந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு பாத்தீங்கன்னா எளிதில் வீடு அமையக்கூடிய அமைப்பு ஏற்படும்.

லக்னத்தில் 4 அதிபதிஇருப்பது லக்னாதிபதி நான்காம் இடத்தில் இருப்பது இவர்களுக்கு வீடு கட்ட வேண்டும் சிந்தனைகள் அதிகமாக இருக்கும் நிறைய கற்பனைகள் இருக்கும் வீடு என்பது மட்டுமே உங்களுடைய லட்சியமாக இருக்கும்.

அதுபோக செவ்வாய் +சுக்கிரன் குரு+ சுக்கிரன் செவ்வாய் +சந்திரன் சுக்கிரன் +ராகு இந்த கிரக இணைவுகள் இந்த கிரக இணைவுகள் நான்காம் பாவத்தில் இருந்தால் இவர்களுக்கு சிறப்பான முறையில் வீடு அமையும்.

அதேபோல் நான்காம் அதிபதி கேந்திர ஸ்தானங்கள்னு சொல்லக்கூடிய 1,4,7,10 இருப்பது திரிகோண ஸ்தானங்கள் 1,5,9 கிரகங்கள் இருப்பது நல்ல வீடு அமைப்பு ஏற்படும் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன், உச்சம் பெற்று இருப்பதும் நான்காம் அதிபதி உச்சம் பெற்று இருப்பதும் அவர்களுக்கு வீடு சிறப்பாக அமையும் . ஒரு சில வீடு கட்டி வாடகைக்கு விடக்கூடிய அமைப்பிருக்கும் அவங்களுக்கு பாத்தீங்க அப்படின்னா 4,2,11 இந்த பாவங்கள் தொடர்பு பெறும் பொழுது அவங்க வீடு கட்டி வாடகைக்கு விட்டு தன லாபம் இவர்களுக்கு உண்டு.

வீட்டைக் கட்டி தொழிலாக செய்யக்கூடியவர்கள் கன்ஸ்ட்ரக்சன் வேலை செய்யறவங்க பாத்தீங்க அப்படின்னா 3,4 10 11 இந்த அதிபதிகள் தொடர்பு கொள்ளும் பொழுது அவர்கள் வீடை பற்றி விற்பனை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு பாத்தீங்க அப்படின்னா கட்டின வீட்டை வாங்கலாமா அல்லது இடம் வாங்கி கட்டலாமா அப்படிங்கற ஒரு சந்தேகம் இருக்கும்.

அதாவது சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பதும் அதாவது திக்பலம் பெற்று சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று திக்பலம் பெற்று வந்து வளர்பிறை சந்திரனாக இருந்தால் கட்டிய வீடு இவர்களுக்கு நன்றாக அமையும்.

இடம் வாங்கி கட்டக்கூடிய அமைப்பு யாருக்கு இருக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா செவ்வாய் சுபத்தன்மை பெற்று நாலாம் இடத்தோடு தொடர்பு பெறும் பொழுது ஆட்சி உச்சம் பெறும் பொழுது இவர்கள் இடம் வாங்கி வீடு கட்டக்கூடிய அமைப்பு ஏற்படும்.

எந்த மாதிரி வீடு அமையும் அப்படின்னு பார்த்தீங்க அப்படின்னா நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் புகழ் வளர்ச்சி அந்த வீட்டில் பார்த்தீங்க. அப்படின்னா மாடி படிக்கட்டுகள் அடுக்குமாடி கட்டுவது உள்ளே படிக்கட்டு வச்சு கட்டுறது இது மாதிரியான வீடுகள் அமையும்
நாலாம் பாவத்தில் இருக்கக்கூடிய சூரிய பகவான் பாவ கிரகங்களின் பார்வையும் சேர்க்கையோ பெறாமல் இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி அமையும் அதேபோல நாலாம் பாவத்தின் சந்திரன் இருந்தால் முதலில் ஒரு வீடு கட்டுவாங்க.

பின்பு அதுக்கப்புறமா இடம் மாற்றம் அடைந்து மறுபடியும் வீடு கட்டுவாங்க

நல்ல முன்னேற்றங்கள் மன அமைப்புகள் எல்லாம் ஏற்படும்.
நாளின் செவ்வாய் பகவான் இருப்பது சில நெருக்கடிகள் போராட்டங்கள் எல்லாம் ஏற்படும்

ஏன்னா கால புருஷனுக்கு எட்டாம் அதிபதி அங்க நாலாம் பாவத்தில் நீச்சமடைவதால் பிற்பகுதியில் இவர்களுடைய வாழ்க்கையும் நல்லா இருக்கும்.

நிறைய ஓடு போட்ட எலிவேஷன் ஒர்க் பண்ணுன வீடுகள் இவர்கள் அமைப்பார்கள்.

நாலாம் பாவத்தில் புதன் பகவான் இருந்தால் அந்த சொத்து இரண்டு பேரில் பெயரில் இருக்கும் வீட்டில் செடி, கொடிகள் கார்டன் அமைச்சு வீடு கட்டக்கூடிய அமைப்பு நிறைய புத்தக அறைகளுக்கு அதிகமான முக்கியத்துவங்கள் கொடுத்து கட்டி இருப்பாங்க.

நாலாம் பாவத்தில் குரு பகவான் இருந்தால் அந்த வீட்டில் நல்ல ஒரு லட்சுமி கடாசமான அம்சமான வீடாக இருக்கும் பூஜை அறை நன்றாக அமைத்து இருப்பார்.

அதற்கு அதிகமான முக்கியத்துவங்கள் வைத்திருப்பாங்க அந்த வீட்ல மர வேலைபாடுகள் நிறைய செஞ்சு இருப்பாங்க இதே நாலாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் அழகான வீடு லட்சணமான வீடு அதிகமான எலிவேஷன் ஒர்க்ஸ் கலர் லைட் செட்டிங்ஸ் இந்த மாதிரி பாத்தீங்கன்னா நிறைய பண்ணி இருப்பாங்க.

எலிவேஷன் வொர்க் ஆர்ச் எல்லாமே
நாலாம் பாவத்தின் சனி பகவான் இருந்தால் பழைய வீடு வாங்கி ஆல்ட்ரேஷன் பண்றது அதிகமாக இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்தி கிரில்கேட்க லிப்ட் வைக்கிறது.

இதுபோல வீடுகள் எல்லாம் அமைப்பார்கள்.

நாலாம் பாவத்தின் நாலாம் பாவத்தின் ராகு பகவான் இருந்தால் பெரிய பெரிய அறைகள் பெரிய வீடு ஆனால் அதில் வாஸ்து குற்றம் ஏதேனும் இருக்கும். நாலாம் பாவத்தில் கேது அந்த வீதியில் கடைசி தெருவாக இருக்கும் சின்ன சந்து போன்ற அமைப்பு காம்போர்ட்டுக்கு பாத்தீங்கன்னா ஒரு பக்கம் இரண்டடி ஒரு பக்கம் ஒரு அடி விட்டு கட்ட கூடிய அமைப்பான வீடுகளாய் இவங்களுக்கு எல்லாம் அமையும். யாருக்கு வீடு அமைவதில் பிரச்சனை ஏற்படும்.

அப்படின்னு பார்த்தீங்க அப்படின்னா நாலாம் அதிபதி நீச்சம் அடைவது அஸ்தமனம் அடைவது நாலாம் பாவம் திதி சூனியம் அடைவது இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும் பட்சத்துல அவங்களுக்கு வீடு அமையவதில் தடைகள் ஏற்படும்.

இதேபோல் நான்காம் அதிபதியும் பாதிக்கப்படும்போது இவர்களுக்கு அதிகப்படியான தடைகள் ஏற்படும் பாவ கிரகங்களுடன் நான்காம் அதிபதி செயற்கை பெறும் பொழுது சனி ராகு கேது இவர்களுடன் தொடர்பு பெறும் பொழுது இவர்களுக்கு இடம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் செவ்வாயுடன் ராகு கேது சனி இந்த கிரகங்கள் இணையும் பொழுது அவர்களுக்கு இடம் வாங்குவதில் பிரச்சனைகள் ஏற்படும்.

புதன் உடன் ராகு கேது சனி ஏற்படும் பொழுது அவர்களுக்கு அந்த பத்திரம் தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும் சுக்கிரனுடன் பாவ கிரகங்கள் இணையும் பொழுது அவர்களுக்கு வீடு கட்டும்பொழுது சிரமங்கள் ஏற்படும்.

சந்திரன் ராகு நான்காம் பாவத்தில் இருப்பது வாஸ்து பிரச்சினை ஏற்படும்.நாலாம் அதிபதி 6 8 12 இல் மறைந்திருப்பதும் தன்னுடைய பாவத்துக்கு 6.8 12மறைந்திருப்பதும் வீடு கட்டுவதில் தடைகள் ஏற்படும்.

வீடு கட்டி கடன் வாங்கி அதனால் அந்த வீட்டில் இருக்க முடியாம வீட்டை விற்ற கூடிய அமைப்பும் ஏற்படும். அதாவது நான்கு ஆறு எட்டு பன்னிரெண்டு இதெல்லாம் தொடர்பு பெறும் பொழுது பாத்தீங்க அப்படின்னா கடன்கள் வாங்கி அதை கட்ட முடியாமல் அந்த வீட்டை விட்டுட்டு வெளியே போய் இருப்பார்கள்

அதேபோல நான்காம் அதிபதி அஷ்டமாதிபதி கூட சேரும்பொழுதும் பாதகாதிபதியை சேர்க்கை பெறும் பொழுதும் நான்காம் அதிபதி அஷ்டமத்தானத்தில் இருப்பதும் பாதகஸ்தானத்தில் இருப்பதும் இவர்கள் கட்டியை வீட்டில் குடியிருக்க முடியாத சூழலை உருவாக்கும் நான்காம் பாவத்தில் மாந்தி இருந்தாலும் இதே பாதிப்பை கொடுக்கும் வீடு கட்டி விட்டு வெளியே அல்லது வெளியூரில் இருப்பார்கள்.

எந்த காலகட்டத்தில் வீடு கட்டலாம் அப்படின்னு பார்த்தீங்க சுக்கிர திசா புத்திசெவ்வாய் திசை புத்தி சந்திர திசை புத்தி புத்தி இந்த திசைகள் நடக்கும் போது வீடு கட்டலாம் வாங்கலாம் நான்காம் பாவத்தில் ஒரு கிரகம் நின்று திசா புத்தி நடக்கும்போதும் நான்காம் அதிபதியின் திசா புத்தி நடக்கும் போதும் நான்காம் அதிபதி நின்ற நட்சத்திர அதிபதியின் திசா புத்தி நடக்கும் பொழுதும் வீடு கட்டக்கூடிய அமைப்புகள் ஏற்படும்.

ஒரு பாவம் இயங்கும் பொழுது அதற்கு தீர்மான ஸ்தானங்கள் வேலை செய்யும் 4,8,12 இந்த பாவங்களின் திசா புத்தி நடந்தாலும் வீடு கட்டும் கூடிய அமைப்பு ஏற்படும்.

இவர்களுக்கு முதலில் நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்த உடனே உங்கள் ஜாதகத்தை கட்டண வீடு வாங்கலாமா அல்லது இடம் வாங்கி கட்டலாமா அப்படிங்கறத தெரிஞ்சுட்டு உங்க கொடுப்பினை என்ன அப்படிங்கறது பாத்துட்டு நாம எந்த அளவுக்கு வீடு கட்டலாம் அப்படின்னு தெரிஞ்சுகிட்டு எவ்ளோ கடன் வாங்கி பண்ணலாம் அடுத்து வரக்கூடிய திசா புத்திகள் நமக்கு அந்த கடனை அடைக்க கூடிய வருமானங்கள் இருக்கா அப்படிங்கிற விஷயத்தை எல்லாம் யோசனை பண்ணிட்டு அதுக்கப்புறம் நீங்க உங்க கொடுப்பனைக்கு ஏத்த மாதிரி வீடுகள் அமைச்சுக்கிறது வாஸ்து முறைப்படி அப்படிங்கறத வந்து பிற்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை தவிர்த்துக்கலாம்

அதுபோக எங்களால் ஒரு சென்ற இடம் கூட வாங்க முடியல அப்படின்னு நினைக்க கூடியவங்க வந்து பாத்தீங்க அப்படின்னா சோழிங்கநல்லூர் உள்ள நரசிம்மர் ஆலயம் போய் வழிபாடு செஞ்சிட்டு வர்றது ஒரு வீடு வாங்கக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும்

அது போக திருச்சி உள்ள மணச்சநல்லூர் பூமிநாதர் ஆலயம் உள்ளது அங்க போயி நீங்க இடம் வாங்கக்கூடிய அமைப்புக்காக நீங்க வேண்டுதல் செஞ்சிட்டு வரும் பட்சத்தில் உங்களுக்கு வீடு வாங்கக்கூடிய அமைப்புகள் ஏற்படும்.

அதுபோக jவைத்தீஸ்வரன் ஆலயம் நீங்க போய் வழிபாடு செஞ்சுட்டு வரலாம்.
உங்களுக்கு சொந்த வீடு அமையும் வாய்ப்புகள் ஏற்படும்.

-கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ்

akkappore.news சொடுக்குங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed