கொங்கு மண்ணின் மகள் தடகள வீராங்கனை வித்யா ராமராஜ்-க்கு மலரும் நினைவுகள் குழு சார்பில் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் வாழ்த்து…!!

2026-ம் ஆண்டுக்கான 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games 2026) ஜப்பான் நாட்டின் ஐச்சி மாகாணம் மற்றும் நகோயா நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, 2026 வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

இடம்:
நகோயா சிட்டி மிசுஹோ பார்க் தடகள மைதானம் மற்றும் பிற அரங்கங்கள், ஜப்பான்.

பங்கேற்பு:
இந்தியா உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் சாதனை:
இந்தப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 85 பதக்கங்களை (21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம்) வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராமராஜை ரஜினிகாந்த் நேரில் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

ஆசிய தடகளப் போட்டியில் பி.டி உஷா சாதளையை 42 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்து 3 பதக்கங்களை வென்ற கொங்கு மண்டல சாதனை மங்கை வித்யா ராம்ராஜை நேரில் சந்தித்து மதுக்கரை பகுதி மக்கள் சார்பிலும் மலரும் நினைவுகள் குழு சார்பிலும் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பத்திரிக்கையாளர்கள் ஆர்.கே.விக்கிரம பூபதி, ராதா ஸ்டுடியோ ஜான் மற்றும் மதுக்கரை ஆனந்த் ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.

இவர்களுடன் குழந்தைகள் வருங்கால தடகள வீராங்கனைகள் ஜெஸி, பிரின்சி இருந்தனர்.

தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் மதுக்கரை 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குக்கிராமம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர். இந்திய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ். இவரின் தந்தை லாரி ஓட்டுநர். தாயார் மீனா இல்லத்தரசி. இவருடன் ஒரே இரட்டையராக பிறந்தவர் நித்யா. இவரும் ஒரு தடகள வீராங்கனை ஆவார். வித்யா ராம்ராஜ் இந்திய ரயில்வேயில் பணி புரிகிறார்.

இரட்டை சகோதரிகளை ஈரோடு பெண்கள் விளையாட்டு பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர்.அங்கே சகோதரிகள் இருவரும் ஹாக்கி விளையாடத் தொடங்கினர்.

வித்யா ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2016 முதல் 2019 வரை) படித்து இளங்கலை பட்டம் பெற்றார்.

வித்யா ராம்ராஜ் 1998 ம் ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி பிறந்தார்.இவர் 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறார். 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் 4×400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4×400 கலப்புப் பிரிவில் வெள்ளியும் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.

இவர் மூன்று முறை தேசிய போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார்.

வித்யா 2023 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி சீனாவின் ஹாங்சோவில் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் ஓடி 1984 ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி. டி. உசா செய்த இந்திய தேசிய சாதனையை சமன் செய்தார்.

இவர் அக்டோபர் 3 அன்று 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

முகம்மது அச்மல் வாரியத்தோடி, இராஜேஷ் ரமேஷ் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோருடன் இணைந்து 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2023 இல் வித்யா பங்கேற்ற போட்டிகள்:[5]

15–17 மே 2023: 100 மீட்டர் மற்றும் 100 மீட்டர் தடை ஓட்டம் – பிர்சா முண்டா கால்பந்து மைதானம், மொராபாடி, ராஞ்சி

17 ஜூன் 2023: 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டம் – இந்திய சாம்பியன் தடகள போட்டி, கலிங்கா மைதானம், புவனேஷ்வர்
13 ஜூலை 2023: 100 மீட்டர் தடை ஓட்டம் – ஆசிய சாம்பியன் தடகள போட்டி, சுபச்சலசாய் தேசிய மைதானம், பாங்காக்

30 ஜூலை 2023: 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டம், 4 X 100 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டம் – மஹிந்த ராஜபக்ஷ மைதானம், தியகம
10, 11 செப்டம்பர் 2023: 400 மீட்டர், 400 மீட்டர் தடை ஓட்டம் – இந்தியன் கிராண்ட் பிரிக் 5, சண்டிகர்

பிரதமர் மோடி வாழ்த்து:

பிரதமர் நரேந்திர மோடி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இந்த ஓட்டத்தின் போது அவர் 54.75 வினாடிகளில் இலக்கை எட்டி, 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் புகழ்பெற்ற தடகள வீராங்கனை பி.டி. உஷா படைத்திருந்த நீண்ட கால (42 ஆண்டுகள்) தேசிய சாதனையை முறியடித்தார்.
இவரது இந்த அசாத்தியமான சாதனையைப் பாராட்டி பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்:

உண்மையிலேயே ஒரு சிறந்த ஓட்டம்: வித்யா ராம்ராஜின் செயல்பாடு மிகவும் அற்புதம் மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடியது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

  • வருங்கால வெற்றிக்கு வாழ்த்து: வித்யாவுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, வரும் காலங்களில் அவர் விளையாட்டுத் துறையில் இன்னும் பல புதிய உயரங்களைத் தொட்டு சாதனை படைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
    இது தவிர, கலப்பு
    4×400 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளிப் பதக்கமும், பெண்களுக்கான 4×400 மீட்டர் ரிலே போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் வித்யா ராம்ராஜ் இடம்பெற்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒட்டுமொத்த சாதனைகளுக்காகவும், பிரதமரை நேரில் சந்தித்து அவர் பெற்ற ஊக்கத்திற்காகவும் வித்யா ராம்ராஜ் தனது நன்றிகளை பகிர்ந்துள்ளார்

ரூ.1.55 கோடி பரிசளித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கவுரவிப்பு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2026) பதக்கங்கள் வென்ற தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்-க்கு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வாழ்த்துகளும், மொத்தம் ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகையும் அறிவித்து நேரில் கவுரவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜின் வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும் மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும்” என்று முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பரிசுத் தொகை விவரம்:

• ரூ. 75 லட்சம்: பெண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் (Gold) தங்கப் பதக்கம் வென்றதற்காக.

• ரூ. 50 லட்சம்: 4x400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டத்தில் (Silver) வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக.

• ரூ. 30 லட்சம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் (Bronze) வெண்கலப் பதக்கம் வென்றதற்காக

(இதில் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால தேசிய சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்தார்).

மொத்த ஊக்கத்தொகை: மூன்று பதக்கங்கள் வென்றதற்காக தொகையாக ரூ. 1.55 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *