தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்! ஈரோட்டில் செங்கோட்டையன் கால் வைத்ததும் அதிரடி..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தவெகவில் இணைந்தார். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தார். ஈரோடு மேற்கு தொகுதியின் எம்எல்ஏவாக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துசாமி வென்றார்.

அதிமுகவில் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி ஒவ்வொருவரையாக பதவியிலிருந்து நீக்கி வரும் நிலையில் கே.வி. ராமலிங்கத்தின் பதவியும் பறிபோனது. இதையடுத்து அதிமுகவில் இருந்து விலகிய ராமலிங்கம் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தவெகவுக்கு மாற்று கட்சிகளில் இருந்து பலரும் தாவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார் அமைச்சர் செங்கோட்டையன். அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed