முன்னாள் முதல்வர் கலைஞரின் மனைவி
அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் (95), வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலப் பாதிப்பால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து, அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்தவுடன், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்து வந்து, மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்தும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர்

