விழிப்புணர்வுக் கூட்டம்:
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில், வாடிப்பட்டி வட்டார ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் உரி மையாளர்களுக்கு ஒலி மாசை கட்டு ப்படுத்த
விழிப்புணர்வு கூட்டம் நடந் தது.
இந்த கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர்
கோபி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், வாடிப்பட்டி,

சாணாம்பட்டி, விராலிப்பட்டி, கச்சைட்டி,
மேட்டுநீரேத்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஒலிபெருக்கி
உரிமையாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்,
தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ குழாயினை பயன்படுத்தக்
கூடாது என்றும், திருவிழா காலங்களில்
போட்டி போட்டுக் கொண்டு

ஒலி
பெருக்கி
வைக்க கூடாது என்றும், கிராமப்புறங்களில் பள்ளிக்கூடம் நடைபெறும் வேளைகளில் ஒலி
பெருக்கியை ஒலிபரப்ப கூடாது என்றும்
அறிவுறுத்தப்பட்டது.
