தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்
தேசிய மருத்துவர்கள் தின விழா…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினை

வு நற்பணி மன்றம் சார்பில் 1-7 – 2026 காலை 10.30 மணிக்கு தொண்டாமுத்தூர் பட்டீஸ்வரா மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

பட்டீஸ்வரா மருத்துவமனை டாக்டர் கே.எம். லட்சுமணன் அவர்கள் தனது 83 வயதில் 1967 முதல் கடந்த 60 ஆண்டுகளாக சிறந்த முறையில் மருத்துவ சேவை செய்து வருவதை பாராட்டி தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் மற்றும் சமூக ஆர்வலர் சி. வருண் ஆகியோர் இணைந்து பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் எம். சாந்தி, எம். தனலட்சுமி, ஐ. ஜெயந்தி, டி. வித்யா, வி. விமலா, டி. சுகன்யா, டி. காவியா உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed