தில்லியில் – மும்பை, இந்தியப் பேனா நண்பர் பேரவை தில்லி மாநில கிளை நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மும்பை, இந்தியப் பேனா நண்பர் பேரவை தில்லி மாநில கிளை நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தில்லி வெசுடன் கோர்ட் வளாகத்தில் 19-07-2026 அன்று மாலை 4 மணிக்கு அமைப்பாளர் ஆ. பிரமநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியி ய் திரு. வி. இளஞ்சோழன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கிளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.நாகராசன் பேரவையின் செயல்பாடுகள், விதிமுறைகள் குறித்து விரிவுரையாற்றினார்.

கிளை அமைப்பாளர் ஆ.பிரமநாயகம்,முனைவர் த. நாகராசன், எஸ்..அறிவு செல்வம், விஇளஞ்சோழன் திருமதி. இ. சோதிமணி, கே. லெனின், எம். இராசா,ஏ. சின்னசாமி,
எ ம். விநாயகம், பி. இராமமூர்த்தி, வி. ஆர். சுரேசு குமார், திருமதி. ச. பிரபாவதி, எம். எழிலரசு ஆகியௌர் நிகழ்வில் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக இராஜஸ்தான் கிளை சுயம்பு ஆ. பாலன், கரூர் கிளை எஸ். விவேக், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து வாழ்த்துரை வழங்கினர்.

நண்பர் எஸ்.அறிவுச் செல்வம் மற்றும் வி. ஆர்.சுரேசு குமார் இருவரும் நன்றி நவில தேநீர் சிற்றுண்டியுடன் நிகழ்வு மாலை இனிதே நிறைவுற்றது.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed