
நீட் எதிர்ப்பு போராட்டக்களம் எப்படி இருக்கிறது..? சமஸ் என்ன சொல்கிறார்? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி – மாணவர்கள் போராட்டம் வலுக்கிறது.
நள்ளிரவு 1 மணிக்கு எடுக்கப்பட்ட படம். படத்தை பெரிதாக்கினால், கூட்டம் எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது என்று தெரியும். பகலில் ஒரு பெருங்கூட்டம் வந்து செல்கிறது என்றால், இரவில் ஒரு பெருங்கூட்டம் வந்து செல்கிறது. பகலில் படிக்கவோ, வேலைக்கோ சென்ற இளைஞர்கள் எந்த அயர்வும் இன்றி இரவில் வருகிறார்கள்.
\போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது கரப்பான்பூச்சிகளாக இருக்கலாம்; போராட்டத்தை ஈர்க்கும் சக்தியாக சோனம் வாங்சுக் இருந்திருக்கலாம்; ஆனால், வரும் பெரும்பான்மை கூட்டம் தன்னெழுச்சியாக வருகிறது; தார்மிக ஆதரவு மனதோடு வருகிறது. தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக்கொள்கிறது; போராட்டத்தை கச்சிதப்படுத்துகிறது. வெறும் தேர்வு முறைகேடுகளை மட்டும் அல்ல; இந்திய கல்விமுறையின் மோசமான பகுதியின் மீது அவர்கள் கை வைத்திருக்கிறார்கள். இது ஒவ்வோர் இந்திய வீட்டின் எதிர்காலத்தோடும் தொடர்புடையது..!!
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.


