
உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
உதயநிதியை விடுவிக்க ஆணை
உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவு
விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமீனில் உதயநிதி விடுவிக்கப்படுவார் என அரசு தரப்பு கூறிய நிலையில் இன்றே விடுவிக்க உத்தரவு
உதயநிதி சிறையில் அடைக்கப்பட மாட்டார். விசாரணைக்கு மட்டுமே அவர் அழைத்துச் செல்லப்படுகிறார் என உயர்நீதி மன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பதில் தாக்கல் செய்துள்ள நிலையில்,
தமிழ்நாடு அரசு வழக்கறிஞரின் வாக்குறுதியை ஏற்று, திமுக தாக்கல் செய்த அவசர வழக்கை முடித்து வைத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்….!!

உதயநிதி கைது !
சொதப்பிய காவல்துறை ?!
“உதயநிதி பேசியது மிகவும் ஆபாசமானது என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால், அவரைக் கைது செய்யத் திட்டமிட்ட காவல்துறை காலை ஐந்து மணி சுமாருக்கு அவரை அழைத்துசென்று 10 மணிக்குள் தஞ்சாவூர் நீதிபதி முன்பு நிறுத்தியிருக்க வேண்டும்.
அதை விடுத்து உயர்நீதிமன்றம் திறக்கும் வரை காத்திருந்து அதன் பிறகு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, வடசென்னையில் உள்ள கட்சிக்காரர்கள் தென்சென்னை நீலாங்கரை வரும் வரை அவகாசம் கொடுத்து, உயர்நீதிமன்றம் செல்லவும் அனுமதித்தது பெரிய சொதப்பல்.
அடுத்து, கைது செய்யப்பட்ட உதயநிதி குளிர்சாதன வசதியுடன் கூடிய வாகனம் கேட்டதால் அதை ஏற்பாடு செய்ததுடன், அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மூன்றுபேர் அதே வாகனத்தில் பயணம் செய்யவும் எப்படி காவல்துறை அனுமதித்தது ?
சட்டம் அனைவருக்கும் சமம்தானே ?
எல்லோருக்கும் இதேபோல அரசு வசதி செய்து தருமா ?
என்ற கேள்விகள் நடுநிலையாளர்கள் பலரிடமிருந்தும் வருவது ஆச்சரியம் இல்லை.
BREAKING:எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க உத்தரவு – நீதிமன்றம்.
விசாரணைக்கு பின் விடுவிக்கப்படுவார் என தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வாதம்.
நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே விசாரணையை முடித்து உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு.
