

நீட் தேர்வு: எதிர்ப்பதை விட, வெற்றிக்கு தயார்படுத்துவோம்…!! – இலட்சியத்தென்றல் டி. லட்சுமி காந்தன், தலைவர், அச்சீவர்ஸ் கிளப் இந்தியா. அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
ஒரு மாணவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கல்விக்கு உண்டு. ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி மருத்துவக் கல்விக்கு உண்டு.
அதனால் தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவு இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் இதயத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கலாம். அதில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்துவதும் ஜனநாயக உரிமையே. ஆனால், அந்த விவாதங்களுக்கு மத்தியில் ஒரு உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 61,306 மாணவர்கள் நீட் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்கள் மருத்துவர் கனவை நோக்கி அடுத்த அடியை எடுத்துள்ளனர்.
அந்த எண்ணிக்கைக்குப் பின்னால் எண்ணற்ற ஏழை, எளிய குடும்பங்களின் நம்பிக்கையும், பெற்றோரின் தியாகமும், மாணவர்களின் விடாமுயற்சியும் இருக்கிறது.
ஒரு தேர்வை எதிர்ப்பதால் மருத்தவர்கள் உருவாக மாட்டார்கள். ஆனால், ஒரு மாணவரை சரியான பயிற்சி, தரமான வழிகாட்டுதல் மற்றும் தன்னம்பிக்கையுடன் தயார்படுத்தினால், ஒரு குடும்பத்தின் வரலாறே மாறிவிடும்.
இன்று மருத்துவராகும் ஒரு மாணவர், நாளை நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றப் போகிறார்.
எனவே, நம் இலக்கு தேர்வை எதிர்ப்பது அல்ல; அடுத்த ஆண்டு 61,306 என்ற எண்ணிக்கையை இன்னும் உயர்த்துவது ஆக இருக்க வேண்டும்.
இன்னும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற வேண்டும்.
அதற்கான சிறந்த வழி எதிர்ப்பு அல்ல; ஊக்கம், பயிற்சி, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.
நாம் ஒரு தேர்வை வெல்லும் மாணவர்களை மட்டும் உருவாக்க வேண்டாம்; மனித குலத்தை காக்கும் மருத்துவர்களை உருவாக்குவோம். அதுவே உண்மையான சமூகப் பொறுப்பு…!!
–இலட்சியத்தென்றல் டி. லட்சுமி காந்தன்
தலைவர், அச்சீவர்ஸ் கிளப் இந்தியா
நாம்ஜெயிப்போம் #நீட் #NEET #NEET2026 #மருத்துவர் கனவு #Doctor Dream # Medical Dream




