உலக யோகா தினம் 2026 சிறப்பு கவிதை…!! செய்தி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஆரோக்கியமான முதுமைக்கு யோகா என்பது *2026 ஆம் ஆண்டின் உலக யோகா தினக் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது

யோகா – இந்தியாவின் உலகப் பரிசு

உலகம் முழுதும் ஒலிக்கிறது இன்று..

உயிர் காக்கும் யோகத்தின் புகழ்!
இந்திய மண்ணின் ஆன்மிகச் செல்வம்
இன்று மனிதகுலத்தின் நல்வழி ஆனது.

மூச்சின் இசையில் மனம் மலர்கிறது,
மௌனத்தின் மொழியில் அமைதி பிறக்கிறது;

உடலும் உள்ளமும் ஒன்றிணையும் போது
உயர்ந்த வாழ்வின் வாசல் திறக்கிறது.
வயது கூடினாலும் வலிமை குறையாமல்,
வாழ்வின் பாதையில் நம்பிக்கை தளராமல்,
ஆரோக்கிய முதுமையை அருளும் யோகம்
அனைவருக்கும் அரிய வரம் ஆகும்.

சாதி, மத, மொழிகள் எல்லை கடந்து
சகோதரத்துவம் விதைக்கும் யோகம்;
இந்தியா தந்த இந்தப் பொக்கிஷம்..

இன்று உலகத்தின் ஒற்றுமைக் கீதம்.

ஒவ்வோர் விடியலும் யோகத்தால் தொடங்கட்டும்,
ஒவ்வோர் இதயமும் அமைதியால் நிரம்பட்டும்;

உலக யோகா தினத்தில் உறுதி ஏற்போம் –
உடல் நலம், மன நலம் காத்திட வாழ்வோம்..!

“ ஆரோக்கியமான முதுமைக்கு யோகா ” என்பது 2026 ஆம் ஆண்டின் உலக யோகா தினக் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது !!

யோகா உடல், மனம் மற்றும் ஆன்ம நலத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்வை வழங்குகிறது. அனைவருக்கும் வளம் நலம் வேண்டும் ..

உலக யோகா தின நல்வாழ்த்துகள்!

நாள்தோறும் தேவை பயிற்சி..
.நாள்தோறும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு
தேவை யோகா…

நா. மணிவண்ணன்
புதிய நாளிதழ்
கல்வி டுடே
அக்னிப்புரட்சி

செய்தி ஆசிரியர்
Akkappore.News
அக்கப்போர் நாளிதழ்

SpotlightTamilnadu©️®️

21-06-2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed