
ராகு பகவான் தரும் யோகங்கள்…!! கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ் ஜோதிடம் அறிவோம் தொடர் – 5*
akkappore.news சொடுக்குங்க

ஜோதிடத்தில் ராகு பகவான் ஒரு இயல் கிரகமாகவே இருந்தாலும் யோகங்களை உருவாக்குவதில் மற்ற கிரகங்களை விட வேறுபட்டவர்.
ராகு கொடுத்தால் எவர் தடுப்பார் என்பது போல ராகு பகவான் கொடுக்கும் யோகங்களை யாராலும் தடுக்க முடியாது.
ராகு கத்தி போன்றவர் அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் சில நேரங்களில் நம்மளையே அது அகல பாதாளத்தில் தள்ளி வாழ்க்கை புரட்டிப்போட்டு விடும் என்பதை நாம் மறுக்க முடியாத உண்மை. ராகு பகவான் கண்களுக்கு புலப்படாதவர்
ஆனால் மனித வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பங்களையும் திடீர் மாற்றங்களையும் உருவாக்கும் சக்தி உடையவர் ராகு ஆசை மாயை புதுமை வெளிநாட்டு தொடர்பு திடீர் உயர்வு வீழ்ச்சி இதற்கு எல்லாமே ராகு பகவான் தான் காரணமாக இருக்கிறார்.
வலுவாக இருந்தால் அவர் எந்த எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் ராஜ யோகங்களையும் வாரி வழங்குவார் என்பதை உறுதியாக சொல்லலாம்.
அப்படி ராகுவால் பெறப்படும் சில யோகங்களை பற்றி நாம் பார்க்கலாம்.
கோதண்ட ராகு
கோதண்டம் என்பது வில்(Bow என்பதை குறிக்கும் வில் எவ்வாறு குறியை நோக்கி நேராக பாய்கிறதோ அதுபோல் மனிதன் உயர்ந்த இலக்குகளுக்கு தள்ளிச் செல்லும் சக்தி கொண்ட ராகுவின் யோகமே கோதண்டராக யோகம்.
இந்த யோகம் ஜாதகத்தில் அமைந்தால் மனிதன் வாழ்க்கையில் திடீர் உயர்வு ,அதிகாரம் செல்வம் ,அரசியல் நிர்வாகம், தொழிலில் முன்னேற்றம், என பல விதமான ராஜ யோகங்கள், பலன்கள் கிடைக்கும்.
ராகு பகவான் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய 1,4,7,10 அல்லது திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 1,5,9 பாவங்களில் இருப்பது ராகுவுடன் சுப கிரகங்கள் தொடர்பு பெரும்பொழுது அதாவது குரு சுக்கிரன் புதன் போன்ற சுப கரங்களின் சேர்க்கை பார்வை ராகுவினால் ஏற்படக்கூடிய யோகங்கள் அவர்களுக்கு கிடைக்கின்றது.
ஆனால் இந்த யோகங்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டும் என்றால் லக்னமும் லக்னாதிபதியும் பலமாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் ஜாதகர் முழுமையான பலனை அடைய முடியும் எப்போது இந்த பலன் ஜாதகருக்கு கிடைக்கும் என்றால் ராகுவின் திசை புத்தி காலங்களில் யோகங்களை அனுபவிப்பார்.
இந்த கோதண்டராகு யோகத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் ராகு என்பது ஆசையின் கிரகம் அதனால் அகந்தை, தவறான வழிகளில் பொய் ,சூழ்ச்சி, இவற்றில் சிக்கினால் அதன் யோகங்களின் பலன் குறையும்.
அதேபோல் இந்த திசா புத்தி காலத்தில் நாம் நிதானமாக செயல்பட்டால் இதன் பலன்கள் நிரந்தரமாக நமக்கு கிடைக்கும் இல்லை என்றால் இந்த ராகு திசை முடியும் பொழுது ஓர் உயரத்துக்கு சென்று அதன் திசை முடியும் காலத்தில் கீழே தள்ளிவிடும் என்பதை நாம் மறக்கக்கூடாது.

குரு சண்டாள யோகம்
குரு என்பது ஞானம் தர்மம் ஆன்மீகம், நல்லொழுக்கம், ஆசான் குழந்தை பாக்கியம், வளர்ச்சி ,ஆகியவை ராகு மாயை, ஆசை விதி எதிர்பாராத மாற்றங்களை குறிக்கும்.
இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றாக இணையும் போது உருவாகும் முக்கியமான யோகமே குரு சண்டாள யோகம் ஆகும். குரு+ராகு ஒரே ராசியில் சேர்க்கை அல்லது ஒருவர் கூறுவர் பார்வை செய்யும் நிலையில் இருந்தால் உருவாக்கும் யோகமே குரு சண்டாள யோகம்.
சண்டாளம் என்ற சொல் மரபு விதிகள் இருந்து விலகிய சிந்தனைக்கு கட்டுப்பாட்டில் இல்லாத மனநிலை என்பதை குறிக்கிறது.
குரு ராகு கேது ஒரே ராசியில் சேர்ந்திருப்பது குருவின் மீது ராகு அல்லது கேதுவின் பார்வை ஏற்படுவது குரு பலவீனமாக இருந்து நிழல் கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் இந்த யோகம் ஏற்படும்3,6,10,11 இந்த பாவங்களில் இருந்தால் தொழில் ஆராய்ச்சி நிர்வாகம் அரசியல் தொழில்நுட்பம் இந்த துறையில் முன்னேற்றம் அடைவார்கள்.
இந்த யோகம் இவர்களுடைய பாரம்பரியத்துக்கு அப்பாற்பட்ட ஞானத்தையும் ஜோதிடமும் மந்திரம் தத்துவம் ஆன்மீகத்தில் புதிய சிந்தனைகள் சமூக சீர்திருத்தம் வெளிநாட்டில் சம்பாதிக்கக்கூடிய திறமை அறிவு புதிய கோட்பாடுகள் பல இருக்கும்.
பல பெரிய சிந்தனையாளர்கள் ஜோதிடர்கள், ஆன்மீகவாதிகள் இந்த யோகத்துடன் இருப்பது உண்டு.
குரு சண்டாள யோகம் சோதனையையும் தரும் யோகத்தையும் அதே நேரத்தில் உயர்ந்த ஞானத்தையும் தரும் யோகமாகும்.
இந்த யோகம் குரு திசை புத்தி அல்லது ராகு திசா புத்தி காலத்தில் வேலை செய்யும்.
காலசர்ப்ப யோகம்
ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேது ஆகிய இரு நிழல் கிரகங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் நிலையை குறிக்கிறது ராகு தலை என்றும் கேது வாள் என்றும் ஜாதக கட்டத்தில் ராகு ஒரு ராசியிலும் நேர் எதிரே ஏழாவது ராசியில் கேது இருக்கும்போது மற்ற ஏழு கிரகங்கள் சூரியன் சந்திரன், செவ்வாய், புதன் குரு சுக்கிரன் சனி இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட 180 பாகைக்குள் வரும்போது காலசர்ப்பம் யோகம் உண்டாகிறது.
இந்த யோகம் சில தடைகளை தந்தாலும் ஒருவரை பட்டை தீட்டிய வைரமாக மாற்றும் வல்லமை கொண்டது. இந்த யோகத்தால் இந்த ஜாதகருக்கு எல்லாம் சிறிது காலதாமதமாக கிடைக்கும்.
தாமதமான வளர்ச்சி கல்வி வேலைவாய்ப்பு மற்றும் திருமணத்தில் சில தடைகள் ஏற்படும்.
இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு அவ்வப்போது ஒரு விதமான இடம் புரியாத பயம் அல்லது குழப்பம் மனப்போராட்டங்கள் ஏற்படலாம் .
இந்த யோகம் உள்ளவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டப்பட்டாலும் 33 வயதுக்கு மேல் மிகப்பெரிய வளர்ச்சியையும் புகழையும் அதிர்ஷ்டங்களையும் அடைவார்கள்.
இவர்கள் மற்றவர்களை விட கடினமாக உழைக்கும் திறமையும் விடாமுயற்சியும் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
உதாரணமாக மகாத்மா காந்தி ஜவஹர்லால் நேரு மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்றவர் பல சாதனையாளர்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறது.
இந்த யோகங்கள் உள்ளவர்கள் அதன் விசா புத்தி அதாவது ராகு திசை புத்தி காலங்களில் அவர்கள் வெளி உலகத்திற்கு தெரியும் அளவுக்கு புகழ் பெறுவார்கள். இவர்கள் திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பு.
இவர்கள் கருப்பு உளுந்து தானம் வழங்கலாம். ஏழை எளியோர்களுக்கு கருப்பு உளுந்து சாதம் செய்து அன்னதானம் கொடுத்து வரும் பொழுது இவர்கள் ராகுவின் யோகங்களை எளிதில் பெறுவார்கள்.
ராகு கால வேளையில் துர்க்கை அம்மனுக்கு தீபம் போட்டு வழிபாடு செய்யும் போது ஓம் நாகத் வஜாய வித்மஹே பத்ம அஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரசோதயாத் என்று இந்த காயத்ரி மந்திரத்தை கூறி வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.
- கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம்.*

அக்கப்போர் நாளிதழ்
செய்திப்பிரிவு



