மதுரை,
சோழவந்தான் ஐயப்பன் கோயிலில்
மாணிக்கவாசகர் குருபூஜை…!!
N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.news Just CliCK now

சோழவந்தான்: மதுரை,
சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் திருமறைக் கழகநால்வர் அடியார்கள் திருச்சபை தொண்டர்கள் சார்பாக மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு, திருத்தொண்டர் பக்த சபா குழுவினர் சார்பாக மாணிக்கவாசகர் ஸ்வாமிக்கு அபிஷேகம் அர்ச்சனை நடைபெற்றது.

இதைத்
தொடர்ந்து, திருவேடகம் மேற்கு ராமகிருஷ்ண ஆசிரம தவபோவனத்தின் பரமானந்த சுவாமி மாணிக்கவாசகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் ஐயப்பன் கோவிலில் இருந்து புறப்பட்டு மாரியம்மன் கோவில் சன்னதி தெரு, பெரிய கடை வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, திரௌபதி அம்மன் கோவில் வடக்கு தெரு, மார்க்கெட் ரோடு வழியாக வீதி உலா வந்துபுறப்பட்ட ஐயப்பன் கோவிலில் வந்தடைந்தது.

அடியார்கள் தேவாரம் திருவாசகம் பாடல் பாடி வந்தனர். இதைத் தொடர்ந்து தேவாரம் திருவாசகம் சிறப்பு பக்தி பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்திப்பிரிவு


அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed