

முதல்வர் விஜய்யை விமர்சித்த பாளை சிறையில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் அடைப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு-1 (DCB-1) போலீசார், DCB குற்ற எண்: 16/2026-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களை திங்கள்கிழமை (20.07.2026) கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களை ரவுடி என கூறி ஏடிஎஸ்பி மிரட்டியதால் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

என்னடே பண்ணுவீங்க….. வாங்கடே வாங்கடே.. செய்தியாளர்களை ஒருமையில் பேசி நாக்கை துருத்தி மல்லுக்கு நின்ற ஏடிஎஸ்பி திபு…
தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயனை படம் பிடிக்க முண்டியடித்த செய்தியாளர்களை ரவுடிகள் என்று விமர்சித்ததோடு நாக்கை துருத்தி மிரட்டிய ஏடிஎஸ்பி திபு மிரட்டி சளைக்காமல் செய்தியாளர்களை வறுத்தெடுத்தார்.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்


