
தம்பி விஜயன் நலமோடு இன்றைய கேள்விக்களம் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்வளிக்கிறது…!!
கை.அறிவழகன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தம்பி விஜயன் நலமோடு இன்றைய கேள்விக்களம் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்வளிக்கிறது.
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உளச்சான்றும் அவருக்குப் பின்னிருந்தது ஒரு நம்பிக்கையளிக்கிறது.
அதே வேளையில் “சன் நியூஸ்” ஆசிரியர் திரு.குணசேகரன் அவர்களும் “கேள்விக் களம்” நிகழ்வில்
“குறி வைக்கப்படுகிறார்களா ஊடகவியலாளர்களா?”
“அச்சுறுத்தலுக்குள்ளாகிறதா ஊடக சுதந்திரம்?”
என்ற தலைப்பில் மிகச்சிறப்பான விவாதக் களத்தை முன்னெடுத்தார். முந்தைய பதிவில் அழுத்தமாகவும், கடுமையாகவும் இதை நான் குறிப்பிட்டிருந்தேன். இயல்பாக அதை செய்யக்கூடிய ஆற்றலும், பேராண்மையும் கொண்டவர் தோழர் திரு.குணசேகரன்.
நீதியுடன் இயங்கிய, நீதியை இயக்கிய அனைவருக்கும் அன்பும், தலை தாழ்த்திய வணக்கங்களும். தம்பி விஜயன் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார். நீதியின் வழியில் அஞ்சாமல் நிற்பார். தமிழ் ஊடக அறம் உலகின் பழமையான பண்பாட்டு வெளிச்சம். அதனை அத்தனை எளிதில் வீழ்த்தி விட முடியாது.
கை.அறிவழகன்



