


பிரபலங்கள் மரணங்கள் சொல்வது என்ன…,? நடைப்பயிற்சி ஆபத்து…?? பாக்கெட் நாவல் ஆசிரியர் G.அசோகன் – அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
காலையில் கட்டாயம் நடைபயிற்சி முக்கியம் தவறாம நடங்க என்று எல்லோருமே சொல்ற நல்ல விஷயம்.
ஆனா இப்ப சில பிரபலங்களின் மரணங்கள் நடைபயிற்சியால் தான் என எனவே நடைபயிற்சி போகாதீங்க என்று ஒரு பேச்சும் அடிபடுது.
பல வருடங்களுக்கு முன் நடிகர் முத்துராமன் மலை பிரதேசத்தில் நடைபயிற்சியின் போது மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.
இப்ப அண்மையில் பாக்கியராஜ் சார் காலையில் நடைபயிற்சிக்கு போய் வந்த கொஞ்சநேரத்தில் மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.
இந்த மரணங்களுக்கும் நடைபயிற்சிக்கும் தொடர்பு இருக்கா, இல்லையா என கொஞ்சம் பார்க்கலாம் வாங்க.


இரவில் தூங்க போகிறோம் காலையில் எழுகின்றோம். இந்த எட்டு பத்து மணி நேரம் உடல் அமைதியாகிறது, உடலில் வயிற்றில் எதுவும் இருக்காது.
இது தவிர முதல் நாள் அதிக நேரம் கண் விழித்தல், கார் ஓட்டுதல், மது குடித்தல் இவைகளால் உடலின் தண்ணீர் சத்தும் குறைந்திருக்கும்.
உடலின் மீது அக்கறை கொண்டவர்கள் விடாது நடைபயிற்சி வேண்டும் என செல்வார்கள்,
மேலும் வாக்கிங் போகும்போது எதுவும் சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடித்தா நடக்கும் போது வயிறு பாரமாக இருக்கும் என எதுவும் குடிக்காமல் நடப்பார்கள்.
இதுதான் மிகப்பெரிய இமாலயத் தவறு.
ஏற்கனவே உடல் நீர்வறட்சி (dehydration) யில் இருக்கும் நிலையில் நடைபயிற்சி செல்வதால் தான் இந்த மாரடைப்பு வருகிறது.
இது தான் அதற்கான தூண்டுதல் காரணிகள் (Precipitating factors).
இது தவிற்க காலையில் அரை லிட்டர் சுடு தண்ணீர் அல்லது பழைய சாத (நீசதண்ணி) தண்ணி குடிக்கலாம் இதில் கார்போஹைட்ரேட் (கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் ஆன ஒரு முதன்மை பேரூட்டச்சத்து) உள்ளது.


மீண்டும் நினைவு படுத்துறேன் … வயிற்றுப்போக்கு, இரவில் பயணம், அதிக மதுக்குடித்தல், அதிக குளிர் காலம், அதிக வெய்யில் போன்ற நேரங்களில், நடைபயிற்சியை தவிர்க்கவும்.
நண்பர்களுடன் பேசிக்கொண்டே, செல்போனில் வேகமாக ப்ளூ டூத்தில் பாட்டு கேட்பதும் கூடாது வெறும் வயிரோடு நடக்காதீர்கள்.
தண்ணீர் குடிங்க, பழச்சாறு குடிங்க
ஊசிக்குறிப்பு : பாக்கியராஜ் சார் இறந்த அன்று முதல்நாள் வெளியூரில் நடந்த நடிகை இல்ல திருமண வரவேற்பிற்கு சென்று வந்ததோடு இரவில் முக்கியமான ஒன்றை எழுதி முடித்திருக்கார், எப்ப உறங்கச் சென்றார் என தெரியாது. காலையில் நடைபயிற்சி சென்றுள்ளார், இப்படித்தான் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டே மாரடைப்பு வந்தது.

பத்திரிக்கை பிதாமகர் – குருநாதர் ஜி.ஏ அண்ணனுடன்…….. பத்திரிக்கையாளன் ஆர்.கே.விக்கிரம பூபதி





