மாநில மொழிகளின் உரிமைகள் பாதுகாக்கவேண்டும்..!! கவிஞர் வைரமுத்து பேட்டி…!! N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் akkappore.news Just CliCK now

மதுரை:

இலக்கிய படைப்பிற்கான தேசிய அளவில் வழங்கப்படும் ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்து சென்னையிலிருந்து விமானம் உள்ள மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு:

ஒன்றிய அரசுக்கு ஒரு வேண்டுகோள். அந்தந்த மாநிலங்களின் மொழி உரிமையை நீங்கள் பாதுகாத்துத் தர வேண்டும், அப்போது இந்தியாவின் இறையாண்மை இன்னும் மேம்படும்.இந்தியாவில் பேசப்படும் எல்லா தேசிய மொழிகளும் முதலில் அந்தந்த மாநிலங்களில் முதல் வாழ்த்தாகப் பாடப்பட்ட பிறகுதான் தேசகீதமும் தேசிய கீதமும் இடம்பெற வேண்டும்- கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்தார்.

தமிழில் செம்மொழினு சொல்லிட்டு பலவிதமான பெருமையா இருந்திருக்கிறோம், நீண்ட இடைவெளிக்குப் பின் ஞானபீட விருது கிடைத்தது பற்றிய கேள்விக்கு, ஞானபீட விருது என்பது, இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விருது என்று வழங்கப்படுவது. சாகித்திய அகாடமி ஆண்டுக்கு ஆண்டு வழங்கப்படுவது. 22 மொழிகளுக்கும் வழங்கப்படுவது சாகித்திய அகாடமி. ஆனால், 22 மொழிகளில் ஒரு மொழியை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கப்படுவது ஞானபீடம். அதனால்தான் ஒவ்வொரு மொழிக்கும் அது தாமதமாகிறது.

குறிப்பாக தமிழுக்கு மிகத் தாமதமாகியிருக்கிறது. முதல் விருது 1975-இல் அகிலனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் விருது 27 ஆண்டுகளுக்குப் பிறகு 2002-இல் ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது விருது 24 ஆண்டுகளுக்குப் பின்னர் வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மற்ற மொழிகளெல்லாம், இந்தி மொழியெல்லாம் 12, கன்னடம் 6, மலையாளம் 6 என்று அதிக விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், செம்மொழியாகிய தமிழ், மூத்த மொழியாகிய தமிழ், உலகத்தின் பண்பாடுகளுக்கெல்லாம் பங்களிப்புச் செய்த தமிழ், மூன்றுதான் பெற்றிருக்கிறது என்பது தமிழர்களின் தவக் குறை என்று நான் வருந்துகிறேன்.
ஆனாலும், கால் நூற்றாண்டிற்குப் பிறகு ஒரு தமிழ் கவிஞருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ற விருதை, நான் எனக்கு மட்டுமேயான விருதாகக் கருதவில்லை.

இந்த விருதை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் அன்றே காணிக்கையாக்கியிருக்கிறேன்.இதோ, ஞானபீடம் விருது பெற்று மதுரை மண்ணுக்கு முதன்முதல் வருகிறேன். இவர்களின் கோலாகலத்தைப் பாருங்கள், கொண்டாட்டத்தைப் பாருங்கள், முகத்தில் மின்னும் மலர்ச்சியைப் பாருங்கள், கண்ணில் ஒளிரும் மின்னலைப் பாருங்கள்.

இந்த விருது தங்களுக்கெல்லாம் வழங்கப்பட்டதாகத் தமிழ் சமுதாயம் கருதுகிறது. என்னை இந்த விருதுக்குத் தகுதிப்படுத்திய என் ஆசான்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலைவர்கள், ஒவ்வொரு சமூக மனிதனுக்கும் இந்த விருதை நான் காணிக்கையாக்குகிறேன்.

நன்றி சொல்லுகிறேன்…..

மாநில உரிமைகள்… இந்த தேசிய விருதா இருக்கட்டும், அதே சமயத்தில் சாகித்திய அகாதெமி விருதா இருக்கட்டும், மாநில மொழிகள் இருக்கு இல்லையா, இவற்றினுடைய தன்னாட்சி உரிமை குறித்து தற்போது விவாதங்கள் எல்லாம் நடைபெறுகிறது, அதை எப்படி பார்க்குறீங்க? இப்போது நீங்கள் சுற்றி வளைத்து ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்ற ஒரு நிலைக்கு வருகிறீர்கள். உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன்! தமிழ்நாட்டுக்குள் நடக்கும் எந்த விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பது தமிழர்களின் வேண்டுகோள் மட்டுமல்ல, தமிழர்களின் குறிக்கோள்; தமிழர்களின் பெருமை!

நான் தமிழ் மொழி மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று கேட்கிற குறுகிய வட்டத்தைச் சார்ந்தவன் அல்ல. இந்தியாவில் பேசப்படும் எல்லா தேசிய மொழிகளும் முதலில் அந்தந்த மாநிலங்களில் முதல் வாழ்த்தாகப் பாடப்பட்ட பிறகுதான் தேசகீதமும் தேசிய கீதமும் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாங்கள்.
எங்கள் மொழி வாழ்த்து முதலில் டெல்லியில் ஒலிக்கப்பட முடியாது.

எங்கள் மொழி வாழ்த்து கன்னடத்தில் ஒலிக்கப்பட முடியாது. எங்கள் மொழி வாழ்த்து மலையாளத்தில் ஒலிக்கப்பட முடியாது. தாய் தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டும்தான் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்கப்படக்கூடிய உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

அதுதான் மரபு! அப்படித்தான் வந்திருந்தது.இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தேர்ந்தெடுத்து, இசையமைத்து, பாடக்கூடிய உரிமையை எங்களுக்குப் பெற்றுக் கொடுத்த கலைஞரை (கருணாநிதி) இந்த நேரத்தில் நாங்கள் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

எனவே ஒன்றிய அரசுக்கு ஒரு வேண்டுகோள்… அந்தந்த மாநிலங்களின் மொழி உரிமையை நீங்கள் பாதுகாத்துத் தர வேண்டும், அப்போது இந்தியாவின் இறையாண்மை இன்னும் மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என கவிஞர் வைரமுத்து கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed